Cinema History
6 நாள் ஷூட்டிங்னு சொல்லி 100 நாளுக்கு இழுத்துட்டாங்க!… ஜனகராஜுக்கு அடிச்ச யோகம்…
தமிழில் கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையோடு தமிழ் சினிமாவிற்கு வந்து கடைசியாக காமெடி நடிகன் ஆனவர் நடிகர் ஜனகராஜ். பாலைவன சோலை போன்ற படங்களில் நடித்தபோது ஜனகராஜ் கதாநாயகன் ஆகும் ஆசையில் இருந்தார்.
ஆனால் இடையில் அவருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக அவரது பார்வையில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பை இழந்தார் ஜனகராஜ். இதனை தொடர்ந்து தனக்கிருந்த பிரச்சனையையே காமெடிக்கான விஷயமாக மாற்றி தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மாறினார் ஜனகராஜ்.
பல படங்களில் ஜனகராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதில் நாயகன் படம் முக்கியமான திரைப்படமாகும். மணிரத்னம் இயக்கிய திரைப்படத்திலேயே பெரும் தோல்வியை கண்ட படம் நாயகன் என்றாலும் அதன் காட்சியமைப்பு பின்னாளில் பெரிதாக பேசப்பட்டது.
ஜனகராஜ்க்கு அடித்த லக்:
இந்த படத்திற்கு ஜனகராஜை அழைத்தபோது அவருக்கு 6 நாட்களுக்கு மட்டுமே படப்பிடிப்பு இருந்தது. எனவே அதுக்குறித்து பேசியபோது 65,000 ரூபாய் சம்பளமாக கேட்டார் ஜனகராஜ். ஆனால் அவ்வளவெல்லாம் தர முடியாது என்ற படக்குழு இறுதியாக ஒரு நாளைக்கு 5000 ரூபாய் சம்பளம் என பேசினர்..
ஆனால் இயக்குனர் மணிரத்னம் 6 நாட்களில் ஜனகராஜ் காட்சியை முடிக்காமல் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு ஜனகராஜை படப்பிடிப்பிற்கு வர செய்துள்ளார். இதனால் தினமும் அவருக்கு 5000 ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளனர். அப்போதெல்லாம் படப்பிடிப்பு பற்றி மணிரத்தினத்திற்கு பெரிதாக ஞானம் இல்லாததால் அப்படி செய்துள்ளார் என கூறப்படுகிறது.