எந்த நேரத்தில் என்ன செய்வாருனே தெரியாது! ஜனகராஜை கட்டுப்படுத்திய ஒரே நடிகர் இவர்தானாம்..

jana
Janagaraj: எத்தனையோ நகைச்சுவை நடிகர்களை பார்த்து வந்த ரசிகர்களுக்கு எந்தக் காலத்திற்கும் மறக்காத ஒரு நகைச்சுவை நடிகராக இருந்தவர் நடிகர் ஜனகராஜ். அதற்கு ஒரே காரணம் அவருடைய தனித்தன்மையான சிரிப்புதான். வாயை கோணலாக வைத்து நக்கல் தனத்தோடு சிரிக்கும் ஜனகராஜை யாரால்தான் மறக்கமுடியும்?
ரஜினி,கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் என அனைத்து முன்னனி நடிகர்களுடனும் நடித்து தனக்கென ஒரு நிலையான இடத்தை அடைந்தவர். ஆனால் சமீபகாலமாக ஜனகராஜை சினிமாவில் பார்க்க முடிவதில்லை.
இதையும் படிங்க: ஜெயலலிதா கேட்டும் மறுத்த நளினி!.. அதற்கு அவர் சொன்ன காரணம்தான் ஹைலைட்!..
அவரின் நடிப்பில் கடைசியில் வெளிவந்த திரைப்படம் 96. அதன் பிறகு அவர் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார் என்றும் அவருக்கு சில உடல் நலக் கோளாறுகள் ஏற்பட்டதாகவும் ஏகப்பட்ட சர்ச்சைகள் வந்தன.
ஆனால் அவையெல்லாம் பொய் என சில தினங்களுக்கு முன்பு ஜனகராஜ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தன் மனைவியுடன் சென்னையில் தான் இருக்கிறேன். ஆனால் யாருடனும் பேசுவதில்லை. எந்த நடிகர்களின் தொடர்பிலும் இல்லை என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க: சந்திரமுகியாக நான் தான் நடிக்க வேண்டியது… நல்ல வேலை நடக்கல…! நடந்தா நொந்து இருப்போம்ல..!
இந்த நிலையில் ஜனகராஜை பற்றி ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை நடிகர் வாகை சந்திரசேகர் கூறியிருந்தார். வாகை சந்திரசேகருக்கு ஜனகராஜ் மிக நெருக்கமாம். ஜனகராஜ் எப்போ எந்த நேரத்தில் என்ன செய்வார் என்றே தெரியாது எனவும் அவரை யாராலும் கட்டுபடுத்த முடியாது என்றும் கூறியிருந்தார்.
ஆனால் எனக்கு மட்டும்தான் ஜனகராஜ் கட்டுப்பட்டு ஒழுங்கா நடந்து கொள்வார் என்றும் கூறினார். ஒரு சமயம் மணிவண்ணன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஜனகராஜ் கொஞ்சம் சரியில்லாமல் இருந்தாராம்.
இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை: விஜயாவால் கடுப்பான வித்யா… திருமண விஷயத்தில் அவசரம் காட்டும் ஸ்ருதி..!
அதனால் ஜனகராஜ் பேசவேண்டிய வசன பேப்பரை வாகை சந்திரசேகரிடம் மணிவண்ணன் கொடுத்து ஜனகராஜை பேச வைத்து விடு என்று கூறியிருக்கிறார். அப்போது ஜனகராஜிடம் வாகை சந்திரசேகர் ‘கோபப்பட்டுக் கொண்டே இந்த வசனத்தை நான் சொல்ல சொல்ல சொல்லிடு. நான் எங்கு அழுது பேசுகிறேனோ நீயும் அழுது கொண்டே பேசிவிடு’ என்று அந்த நேரத்தில் கூட வாகை சந்திரசேகர் சொன்ன பேச்சை மட்டும்தான் கேட்டாராம் ஜனஜராஜ்.