Categories: Cinema News latest news

யாருக்கும் தெரியாமல் தனியாக வாழும் ஜனகராஜ் – இப்ப எப்படி இருக்காருனு பாருங்க

Actor Janagaraj: இன்று பல கணவன்மார்கள் தன் மனைவிகள் ஊருக்கு போய்விட்டால் அடுத்த வினாடியே தன்னுடைய வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸாக வைப்பது ‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா’ என்ற நகைச்சுவையைத்தான். அப்படி பட்ட நகைச்சுவைக்கு சொந்தக்காரராக விளங்கியவர் ஜனகராஜ்.

80களி ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், கார்த்திக் என அனைத்து முன்னனி ஹீரோக்களுடனும் இணைந்து தன்னுடைய தனித்துவமான நகைச்சுவை காட்சிகளாலும் தனக்கே உரிய பாணியாலும் பேசி மக்களை கவர்ந்தவர்.

இதையும் படிங்க: நானும் எப்பதான் விஜய் மாறி ஆவுறது? சொந்தமாவே சூனியம் வைக்க தயாரான சிவகார்த்திகேயன் – அடக்கடவுளே

அவருக்கு உண்டான தனிச்சிறப்பே அந்த சிரிப்புதான். அதை இன்றளவும் பல மிமிக்ரி கலைஞர்கள் பின்பற்றி வருகின்றனர். அந்தளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஜனகராஜ்.

ஆனால் சில ஆண்டுகளாகவே ஜனகராஜை நாம் சினிமாவில் பார்க்க முடிவதில்லை. அவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 96. அந்த படத்தில் பள்ளிக் கூடத்தின் பாதுகாவலராக நடித்திருப்பார் ஜனகராஜ்.

இதையும் படிங்க: விஜய் டூ சந்தானம்… ஜி.வி. டூ துல்கர்… இந்த வார ஓடிடியில் ரிலீஸாக இருக்கும் சூப்பர் ஹிட் படங்கள்..!

அதன் பிறகு அவரை பார்க்கவே முடியவில்லை. இந்த நிலையில் நீண்ட வருடங்கள் கழித்து ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்த போது சில உண்மைகளை கூறினார் ஜனகராஜ். அதாவது அவர் அமெரிக்காவிற்கு சென்று தனியாக சுற்றிக் கொண்டிருக்கிறார் என்றும் அவருக்கு உடல் நிலை சரியில்லை என்றும் பல செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தன.

ஆனால் அதெல்லாம் வெறும் கட்டுக்கதைகள் என ஜனகராஜ் கூறினார். என்னிடம் இதுவரை விசா கூட கிடையாது. எப்படி அமெரிக்கா போவேன்? ஒரு முறை கூட போனதில்லை. இங்கேயே தான் இருக்கிறேன்.

jana

என் மனைவியுடன் இருக்கிறேன். அவ்வப்போது நண்பர்களாக இருக்கும் என் சக நடிகர்களிடம் தொலைபேசியில் பேசிக் கொள்வேன். ஆனால் யாரும் வருவதும் கிடையாது. நானும் போவதும் கிடையாது. அவரவர் வேலையில் பிஸியாக இருப்பார்கள். எனக்கு வயசு 68 ஆகிறது. நலமுடன் இருக்கிறேன் என்று கூறினார்.

இதையும் படிங்க: உன்ன எவ்ளோ நேரம் பாத்தாலும் சலிக்காது!.. சைனிங் அழகை காட்டி மயக்கும் சிருஷ்டி டாங்கே!.

மேலும் காதில் ஏதோ பிரச்சினை இருப்பதால் அந்த தனித்துவமிக்க சிரிப்பை என்னால் சிரிக்க முடியாது என்றும் கூறினார். ஆனால் பார்ப்பதற்கு மிகவும் உடல் மெலிந்து ஒல்லியாகக் காணப்பட்டார். அதற்கு காரணம் அவர் நாள்தோறும் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறாராம்.

Published by
Rohini