Cinema News
புகழ் கொடுத்த மக்களுக்கு அரசியல் வந்துதான் செய்யணுமா? நல்ல மனசுக்கு உதாரணமா வாழும் ஜனகராஜ்
தமிழ் சினிமாவில் 70 கள் காலத்திலிருந்து நடித்து வருபவர் நடிகர் ஜனகராஜ். காமெடியில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்தவர். தன்னுடைய வித்தியாசமான சிரிப்பாலும் முகபாவனையாலும் அனைவரையும் கவர்ந்தவர். 80களில் கவுண்டமணி செந்தில் என நகைச்சுவை இரட்டையர்கள் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த போது இந்த நேரத்தில் உள்ளே நுழைந்தவர் தான் ஜனகராஜ் .
அவருடைய தனித்துவமான அந்த நகைச்சுவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற அதன் பிறகு அவர் கொடி கட்டி பறக்க ஆரம்பித்தார். கவுண்டமணிக்கு இணையான ஒரு போட்டியாளராக ஜனகராஜ் திகழ்ந்து வந்தார். எல்லா நடிகர்களுடனும் நடித்தார் . இவர்கள் காலத்தில் எந்த ஒரு காமெடியனுக்கும் பாட்டு வைத்ததில்லை.
இதையும் படிங்க: Pushpa2: அது ஐட்டம் சாங் இல்ல… பின்னால் பெத்த காரணம் இருக்கு.. புஷ்பா2 குறித்து ஸ்ரீலீலா!..
ஆனால் ஜனகராஜுக்கு காதல் என்பது பொதுவுடமை என பாட்டு இருந்தது. அதைப்போல நிலா அது வானத்து மேலே என்கிற பாடலும் அவருக்காக நாயகன் படத்தில் வைக்கப்பட்டது. அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நடிகராக பார்க்கப்பட்டார் ஜனகராஜ். இப்படி அடுத்தடுத்து பல படங்களில் நடித்து ஒரு மிகப்பெரிய ஆளுமையாக நகைச்சுவையில் திகழ்ந்து வந்தார்.
ஆனால் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு ஜனகராஜை பார்க்க முடியவில்லை .அதுவும் 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு கிட்டத்தட்ட 15 வருடங்கள் சினிமாவிற்கு இடைவெளி கொடுத்திருந்தார் .அதன் பிறகு தான் 96 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் ஜனகராஜ். நீண்ட வருடங்களுக்குப் பிறகு youtube சேனலிலும் பேட்டி கொடுத்தார்.
அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அமெரிக்கா சென்றிருப்பதாகவும் பல தகவல்கள் வெளியானது. அதைப்பற்றி அவரிடம் கேட்டபோது நான் இங்கு தான் இருக்கிறேன். என்னை தேடி யாரும் வரவில்லை. நானும் யாருடனும் தொடர்பில் இல்லை என மிகவும் கூலாக பதிலளித்தார் ஜனகராஜ். இந்த நிலையில் அவர் சத்தமே இல்லாமல் ஒரு சமூக சேவை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: நயன்தாரா விஷயத்தில் தனுஷுக்கு ஆதரவாக வந்த தீர்ப்பு!.. இனிமே சரவெடிதான்!..
வயதான முதியவர்கள் யாரும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக இலவசமாக முதியோர் இல்லத்தை நடத்தி வருகிறாராம் ஜனகராஜ். அதற்கு காரணம் புகழ் கொடுத்து என்னை வாழ வைத்த இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இவ்வாறு முதியோர் இல்லத்தை நடத்தி வருகிறேன் என அந்த பேட்டியில் கூறியிருந்தார் ஜனகராஜ் .
இதே மாதிரியான ஒரு டயலாக் தான் விஜய்யும் சமீபத்திய அந்த மாநாட்டில் பேசியிருந்தார். பேரும் புகழும் கொடுத்த மக்களுக்கு ஏதாவது செய்யணும்ல. அதனால வந்துட்டேன்னு அரசியல் வருகையை பற்றி கூறியிருந்தார் விஜய் .அதைப்போல ஜனகராஜ் சமூக சேவை செய்து வருகிறார்.