எம்.ஜி.ஆர் மற்றும் ஜானகியை பழி வாங்க வேண்டும்... ஜானகியின் மாமாவால் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு...

by Akhilan |
ஜானகி
X

ஜானகி

ஜானகியினை நடிக்க வைத்து பணத்தினை சம்பாரிக்கலாம் என நினைத்த அவர் மாமா, எம்.ஜி.ஆர் மீது ஜானகிக்கு ஏற்பட்ட காதலால் இருவரையும் பழி வாங்க நீதிமன்றம் வரை சென்ற சம்பவம் குறித்த முக்கிய தகவல்கள்.

ராஜமுத்தி என்ற படத்தில் எம்.ஜி.ஆரும், வி.என்.ஜானகியும் நடித்திருந்தனர். அப்படத்தில் ஏற்பட்ட பழக்கம் இருவருக்கும் காதலாக மாறியது. இது திருமணம் என்னும் நிலையை அடைய தான் எண்ணற்ற போராட்டங்களை சந்தித்தார். ஜானகியிடமும் தனது காதலை நேரடியாகவே கூறினார். அந்த வேளையில், ஜானகியின் தாய்மாமன் நாராயணனுக்கு இவர்கள் காதலில் துளியும் விருப்பம் இல்லை. அவர் இந்த திருமணம் நடக்க வேண்டும் என்றால் சில நிபந்தனைகள் இருப்பதாக கூறினார்.

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர்

இந்த சம்பவத்தினை தொடர்ந்து இருவரையும் எதுவும் பேசிக்கொள்ள கூடாது என அவர் மாமா கூறி இருந்தார். அப்படி இருந்தால் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாகவும் கூறி இருந்தார். இப்பிரச்சனை நடந்து கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் “மருத நாட்டு இளவரசி” படத்தின் படப்படிப்பு மைசூரில் தொடங்கியது. ஆனால், ஜானகி தனது தந்தையுடன் கலந்து கொண்டார்.

ஆனால், இங்கு அவர் மாமா கூறியது போல ஜானகி எம்.ஜி.ஆருடன் பேசவே இல்லை. இதுகுறித்து விசாரித்த போது, என் தந்தையிடம் நீங்கள் என் காசுக்காக தான் பழகுவதாக பொய் கூறி இருக்கிறார். அதனால் தான் அமைதியாக இருந்ததாக தனது நிலையை கடிதம் மூலம் உணர்த்தினார் ஜானகி.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆருக்கு திருமணம் ஒப்பந்தம் போட்ட மாமா… ஆத்திரத்தில் கத்திய ஜானகி…

இந்நிலையில், ஜானகியை பத்து ஆண்டுகளுக்கு தான் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், தனது அனுமதியின்றி அவர் எந்த புதிய படத்தையும் ஒப்புக் கொள்ளக் கூடாது என ஜானகி மாமாவிடம் இருந்து எம்.ஜி.ஆருக்கே ஒரு கடிதம் வந்தது. இந்த தகவலை அறிந்த ஜானகி அதிர்ந்தார். தான் எந்த ஒப்பந்தமும் கையெழுத்து போடவே இல்லையே எனக் கூறினார்.

வி என் ஜானகி -எம் ஜி ஆர்

வி என் ஜானகி -எம் ஜி ஆர்

இதை தொடர்ந்து, ஜானகி மாமா மீது வழக்கு தொடரப்பட்டது. ஜானகியை முதன்முதலில் அறிமுகப்படுத்திய கே.சுப்ரமணியத்தின் உதவியோடு ஒரு பெரிய வக்கீல் இந்த வழக்கினை நடத்தினார். அந்த வக்கீல் ஜானகியின் மாமாவிடன் பேசிய போது எம்.ஜி.ஆரையும், ஜானகியையும் பழி வாங்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் இது வழக்கானால் தான் பிரச்சனை சரியாகும் எனக் கூறினார் வக்கீல்.

இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே ஜெமினி அதிபரான எஸ்.எஸ்.வாசனிடம் ஜானகி ஒரு உதவி கேட்டார். தனது மாமாவிடம் இதை பேசி சரி செய்ய முடியுமா எனக் கேட்டார். “இன்னொருவரை திருமணம் செய்து கொள்வது உனது சொந்த விஷயம். உன் பணத்தினை ஏமாற்றுவது மிகப் பெரிய சமூகக் குற்றம். நான் உனது மாமாவிற்கு புத்தி கூறுகிறேன் என்றார். வாசன் ஜானகியின் மாமா நாராயணனை சந்தித்தார். அப்போது அவரது மாமா, ஜானகியின் பணத்தில் ஒரு காசுகூட எனக்கு வேண்டாம். ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றும் ஜானகியின் உறவினரிடம் மொத்த பணத்தையும் தந்து விடுகிறேன் எனக் கூறி இருக்கிறார்.

இதை ஒப்புக்கொண்ட வாசன் அப்படியே செய்யுமாறும் கூறினாராம். ஜானகியின் பணத்தை ஜெமினி ஸ்டுடியோவிலே பணியாற்றிக் கொண்டிருந்த அவரது உறவினரிடம் கொடுத்து விடுவதாகச் சொன்ன ஜானகியின் மாமா கொடுப்பது போல கொடுத்துவிட்டு அந்தப் பணத்தை திரும்பவும் வாங்கிச் சென்றுவிட்டிருந்தார்.

இதை தக்க சாட்சியுடன் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஜானகி தரப்புக்கு வந்தது. அப்போது மீண்டும் வாசனிடமே உதவி கேட்டார். ஆனால் இது அவருக்கு பிரச்சனை உருவாகும். தேவையில்லாத கேள்விகளை நீதிமன்றத்தில் சந்திக்க நேரும் எனவும் கூறினார்கள். இருந்தாலும், நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல சம்மதம் கூறினார் வாசன். அவரின் சாட்சியால் அந்த வழக்கில் ஜானகிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story