பலரும் பாட மறுத்த அந்த பாடல்!.. அசால்ட்டா பாடி அசர வைத்த பாடகி எஸ்.ஜானகி!...

S Janaki songs: தமிழ் சினிமா பாடல்களில் முக்கிய ஆளுமைகளை கணக்கெடுத்தால் அதில் பின்னணி பாடகி ஜானகிக்கு முக்கிய இடம் உண்டு. தேன் சொட்டும் குரலில் இவர் பாடிய பல பாடல்கள் ரசிகர்களுக்கு தாலாட்டுதான். இவரின் குரலில் ரசிகர்கள் மெய் மறந்து போனார்கள். இளையராஜாவின் இசையில் இவரும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இணைந்து பாடிய பல பாடல்கள் இப்போதும் காற்றில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

அதேபோல், திரையில் பெண் கதாபாத்திரங்கள் சோகமாக பாடும் பாடல் எனில் அதற்கு ஜானகிதான் ஒரே சாய்ஸ். ஸ்ரீதேவி, அம்பிகா, ராதா உள்ளிட்ட பல நடிகைகள் பாடிய சோக பாடலுக்கு குரல் கொடுத்தவர் ஜானகி. இப்படி ஜானகி பாடிய பல பாடல்களைத்தான் இப்போதும் பல பெண்கள் இசைக்கச்சேரிகளில் பாடி வருகிறார்கள்.

இதையும் படிங்க: மறுநாள் கச்சேரி! முதல் நாள் இரவு மூச்சுத்திணறல் – அரங்கமே கூடியிருக்க பாடகி ஜானகி செய்த மேஜிக்

ஆந்திராவை சேர்ந்த எஸ்.ஜானகி பல இசை நிகழ்ச்சிகளில் பாடிவிட்டு சினிமாவுக்கு வந்தார். துவக்கத்தில் வாய்ப்பு தேடி பல இசையமைப்பாளர்களையும் சந்தித்து வாய்ப்பு கேட்டார். டீன் ஏஜ் முதலே பாடி வந்த ஜானகி ஒருகட்டத்தில் சினிமாவில் நுழைந்தார். ஆனாலும், இவருக்கு பெரிய வாய்ப்புகள் அமையவில்லை.

திறமை இருந்தும் நிரூபிக்க முடியவில்லையே என ஜானகி ஏங்கிய போதுதான் சினிமாவில் நுழைந்தார் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி படத்தில் ஜானகியின் திறமை நிரூபிக்கும் வகையில் ‘அன்னக்கிளி உன்ன தேடுதே’ பாடலை கொடுத்தார் இளையாராஜா. இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து பிரபலமானது. அதன்பின் அவரின் இசையில் பல நூறு பாடல்களை ஜானகி பாடினார்.

இதையும் படிங்க: வாலியின் பாடல் வரிகளை பாட முடியாமல் அழுத எஸ்.ஜானகி – அட அந்த பாட்டா?!..

ஜெமினி, சாவித்ரி நடித்து 1962ம் வருடம் வெளியான திரைப்படம் கொஞ்சும் சலங்கை. இந்த படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. இந்த படத்திற்காக ‘சிங்காரவேலனே தேவா’ என்ற பாடல் உருவானது. ஆனால், இந்த பாடலை பாடுவது கடினம் என சொல்லி அப்போது முன்னணி பாடகிகளாக இருந்த பி.சுசீலா, லீலா ஆகியோர் மறுத்துவிட்டனர்.

ஏனெனில், நாதஸ்வரத்தின் ஸ்வரங்களோடு குரல் இணைந்து பயணிக்க வேண்டும். எனவே, பலரையும் தேடி அலைந்தபின் ஜானகியை பாட வைத்தார் சுப்பையா நாயுடு. காரக்குறிச்சி அருணாச்சலத்தின் நாதஸ்வரத்தோடு இணைந்து பாட வேண்டும். தொழில்நுட்பம் வளராத காலம் என்பதால் மிகவும் கடினமான பாடல் அது.

ஆனால், அந்த இளம் வயதிலேயே ஒரே டேக்கில் அந்த பாடலை ஜானகி பாடி முடித்து அங்கிருந்த எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி பாராட்டை பெற்றார். இசை ஜாம்பாவான்களே அசந்துபோகும் அளவுக்கு பாடிய ஜானகி பெரிதும் பிரபலமும் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எல்லாத்துக்கும் நான்தான் காரணம்!.. எம்.ஜி.ஆரிடம் கண்ணீர் விட்ட ஜானகி!.. நடந்தது இதுதான்!…

Related Articles
Next Story
Share it