Connect with us
janaki

Cinema History

மறுநாள் கச்சேரி! முதல் நாள் இரவு மூச்சுத்திணறல் – அரங்கமே கூடியிருக்க பாடகி ஜானகி செய்த மேஜிக்

Singer S. Janaki: சிங்காரவேலனே தேவா என்ற பாடலை யாராலும் மறக்க முடியுமா? இன்று வரை எந்தவொரு கோயில் திருவிழானாலும் இந்த பாடல் ஒலிக்காமல் அந்த திருவிழா முற்றுப் பெறாது. அந்தளவுக்கு ஓம்காரத்துடன் ஒலித்தது அந்தப் பாடல். அதற்கு பெருமைக்கு சொந்தக்காரர் ஜானகி.

அந்த ஒரு பாடலால் சினிமா ஜானகியை வாரி அணைத்துக் கொண்டது. 1960களில் ஓரளவு சினிமாவில் பயணப்பட்டு வந்தாலும் இசைஞானி இளையராஜா வரவுக்கு பிறகு ஜானகி சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தார்.

இதையும் படிங்க: இன்னொரு தபா அஜித் படம் பண்ணுவீங்களா!.. சிறுத்தை சிவா ரியாக்‌ஷன் தான் செம!.. ரொம்ப அடி வாங்கியிருப்பாரோ?..

அவர் இசையமைத்த பெரும்பாலான பாடல்களை ஜானகியை வைத்து பாடவைத்தார்.ஜானகியால் இளையராஜாவுக்கு பெருமையா? அல்லது இளையராஜாவால் ஜானகிக்கு பெருமையா? என்ற அளவுக்கு இவர்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக அமைந்தது.

எத்தனையோ பாடகர்கள் ஒரு முறையாவது இளையராஜாவின் இசையில் பாட மாட்டோமா என்று தவம் கிடக்கிறார்கள். ஆனால் இளையராஜாவின் இசையில் அதிக பாடல்களை பாடிய பெருமை ஜானகியை சேரும். இளையராஜாவை பற்றி பல விமர்சனங்களை நாம் கேட்டிருக்கிறோம். கோபக்காரர், அவரை விட்டு போய்விட்டால் திரும்பவும் அவரை சேர்த்துக் கொள்ள மாட்டார் என்று.

ஆனால் ஜானகி ஒரு சமயம் இளையராஜாவின் இசையில் பாட மறுத்து கோபத்தில் சென்ற போது இளையராஜாவே முன்வந்து ஜானகியை சமாதானம் செய்துபாட அழைத்த சம்பவமெல்லாம் நடந்திருக்கிறது. இந்த நிலையில் ஜானகி ஒரு சமயம் அமெரிக்காவில் கச்சேரிக்காக சென்றிருக்கிறார்.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த படம்- ஐயா தலைவரே! தெரிஞ்சுதான் சொன்னீங்களா? லியோ குறித்து ரஜினி கருத்து

மறு நாள் மாலை கச்சேரியாம். முதல் நாள் இரவு எல்லாரும் தூங்க செல்ல அதிகாலை 3 மணியளவில் ஜானகிக்கு  மூச்சுத்திணறல் வந்திருக்கிறது. ஏற்கனவே ஜானகிக்கு ஆஸ்த்மா பிரச்சினை இருந்ததால் அதன் காரணமாகத்தான் மூச்சுத்திணறல் வந்திருக்கிறது என வழக்கமான மாத்திரிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் மூச்சுத்திணறல் அதிகமாகிக் கொண்டே போக அங்கு இருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது இதயத்தில் இருந்து மூளை செல்லும் இரத்தக் குழாயில் வீக்கம் இருப்பதாக மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

அறுவை சிகிச்சையும் செய்திருக்கிறார். 10 நாள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். எழுந்திருக்கக் கூட முடியாத நிலையாம். 10 நாள் கழித்து வாஷிங்டனில் ஒரு கச்சேரிக்கு ஜானகியை சும்மா வந்து உட்கார்ந்தாலே போதும் என்று சொல்லி அழைத்துப் போயிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: ஜெய் படத்தை வாங்க மாட்டேன்னு சொல்லிட்டேன்.. என் மேல அந்த பிரபலம் கடுப்பாக காரணமே அதுதான்.. லலித் பகீர்!

வீல்சேரில்தான் போனாராம். வந்தவரிடம் கடவுள் வாழ்த்து பாடலை மட்டும் ஒரு லைன் பாடி நிகழ்ச்சியை ஆரம்பிக்க முடியுமா? என்று கேட்டிருக்கிறார்கள். மெதுவாக எழுந்து மேடைக்கு சென்று கடவுள் வாழ்த்து பாடலை பாடியதோடு மட்டுமில்லாமல் வரிசையாக 10, 15 பாடல்களையும் சேர்த்து பாடியிருக்கிறார் ஜானகி.

இதை கேட்டதும் அங்கு இருந்தவர்கள் சில ஆனந்தத்தில் கண்ணீர் வடித்து அந்த பாடலை கேட்டுக் கொண்டிருந்தார்களாம். கடைசியில் எல்லாம் பாபாவின் மகிமை என்று கூறி இறங்கினாராம் ஜானகி.

google news
Continue Reading

More in Cinema History

To Top