Connect with us

Cinema News

இன்னொரு தபா அஜித் படம் பண்ணுவீங்களா!.. சிறுத்தை சிவா ரியாக்‌ஷன் தான் செம!.. ரொம்ப அடி வாங்கியிருப்பாரோ?..

வீரம், வேதாளம், விஸ்வாசம் மற்றும் விவேகம் என நடிகர் அஜித்தை வைத்து 4 படங்களை இயக்கிய சிறுத்தை சிவா நேற்று நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட ஜப்பான் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி பங்கேற்ற ஜப்பான் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், அந்த விழாவில் நடிகை தமன்னா, இயக்குநர்கள் சிறுத்தை சிவா, லோகேஷ் கனகராஜ், எச். வினோத், பா. ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஜெய் படத்தை வாங்க மாட்டேன்னு சொல்லிட்டேன்.. என் மேல அந்த பிரபலம் கடுப்பாக காரணமே அதுதான்.. லலித் பகீர்!

தமிழ் சினிமா நட்சத்திரங்கள் அதிகப்படியாக சமீபத்தில் கலந்து கொண்ட மிகப்பெரிய விழாவாக ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

நடிகர் சூர்யாவை வைத்து கங்குவா படத்தை பிரம்மாண்டமாக இயக்கி வரும் சிறுத்தை சிவாவிடம் பத்திரிகையாளர்கள் சிலர், அடுத்து அஜித் சாருடன் எப்போ படம் பண்ணுவீங்க என்கிற கேள்விக்கு, பதில் ஏதும் அளிக்காமல் கோடி கும்பிடு என்கிற ரேஞ்சுக்கு கையெடுத்துக் கும்பிட்டு சிறுத்தை சிவா கிளம்பிய வீடியோ க்ளிப்பிங்கை ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சேலையில வீடு கட்டவா?… கருப்பு சேலையில் கவர்ச்சியை அள்ளி வீசும் தமன்னா!…

இனிமேல் அஜித் படத்தை சிறுத்தை சிவா இயக்கவே போவதில்லை என்பதை தான் இப்படி சிம்பாலிக்காக சொல்லி, அந்த கேள்வியையும் அவர் புறக்கணித்துள்ளார் என கிளப்பி வருகின்றனர்.

சூர்யா, திஷா பதானி நடிப்பில் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா படம் 10 மொழிகளில் உருவாகி வரும் நிலையில், அடுத்த ஆண்டு சம்மருக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தம்பி கார்த்தி பொன்னியின் செல்வன் எனும் பிரம்மாண்ட படத்தை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த நிலையில், தானும் ஒரு பீரியட் ஃபேண்டஸி படத்தை ரசிகர்களுக்கு கொடுத்து பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனையை படைக்க வேண்டும் என்பதில் குறிக்கோளுடன் சூர்யா இருப்பது தெளிவாக தெரிகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top