ஜனநாயகன் பட வாய்ப்புக்காக 6 மாசமாக அலைக்கழிக்கப்பட்ட நடிகை… வாட் புரோ… இட்ஸ் ராங் புரோ..!

by sankaran v |   ( Updated:2025-05-03 01:20:26  )
jananayagan
X

jananayagan

2012ல் வெளியான அம்புலியில் அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி. பெரிய அளவில் இவருக்கு மார்க்கெட் இல்லை. இருந்தாலும் விடாமல் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார். விஜயின் கடைசி படம் ஜனநாயகன் என்பதால் எப்படியாவது படத்தில் நடித்து விட வேண்டும் என்ற ஆசை சனம் ஷெட்டிக்கு இருந்தது. அதற்காக தீவிரமாக முயற்சி செய்துள்ளார்.

ஜனநாயகன் டீம்ல அசிஸ்டண்ட் டைரக்டரா இருக்குற ஒருத்தரை நடிகை சனம் ஷெட்டி சந்தித்து படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டாராம். ஆனால் முதலில் ஓகே என்று சொல்வது போல சொல்லி கடைசியில் தெளிவாக எந்தப் பதிலும் சொல்லவில்லையாம். அதுவும் 6 மாசமாக நடிகையை அலைய விட்டாங்களாம். இதுகுறித்து நடிகை சனம் ஷெட்டி என்ன சொல்றாருன்னு பாருங்க…

ஜனநாயகன் டீம்ல அசிஸ்டண்ட் டைரக்டரா இருக்குற ஒருத்தரை தளபதியோட கடைசி படம் ஆச்சே. அவர் கூட நடிக்கிற ஆசை இதுக்கு அப்புறம் நிறைவேறாதே என்கிற ஒரு நம்பிக்கையில 6 மாசமாக வாய்ப்புக்காக ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கேன்.

வாய்ப்பு இருக்கு. ஓகே ஆகிடும் என்றுதான் அவர் சொல்லிக்கிட்டே இருந்தார். தப்பான வகையில் அவர் எதுவும் பேசவில்லை. ஆனால், என்னை அலைய வைத்திருக்கிறார்கள் என்று இன்னைக்குத் தான் எனக்கு தெரிய வருது. இப்போ கேட்டா, அதற்கு வாய்ப்பே இல்லை என்பது போல் சொல்கிறார்கள்.

ஏன் இப்படி அலைய வைக்கிறீங்க என்று கேட்டதற்கு, நான் உங்களை ரெஃபர் பண்ற அளவுக்கு பெரிய ஆள் இல்லைன்னு சொல்றாங்க. மார்க்கெட் வேல்யூ இல்லாத ஹீரோயின் என்பதால் இப்படி அலைய விடுவீங்களா? இந்த பாரபட்சம்தான் எனக்கு பிரச்சனை. தளபதி விஜய்க்கு இந்த விஷயம் தெரிய வர வாய்ப்பே இல்லை. அதனால் அவர்தான் எனக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்கிறார் நடிகை சனம் ஷெட்டி.

Next Story