ஒரு வழியாக ஜனநாயகன் படத்திற்கான பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கிறது. படத்தின் ரிலீஸ் தேதிக்கு சில நாட்களுக்கு முன்பு மறுதணிக்கை என தணிக்கை வாரியம் சொன்னதால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் படத்தின் தயாரிப்பாளர்..
முதலில் தீர்ப்பு சாதகமாக கிடைத்து, அதன் பின் அதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்து, தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டு, அதன்பின் உச்சநீதிமன்றத்திற்கு தயாரிப்பாளர் போய், அதன்பின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்துக்கே வந்து என ஒரு மாதம் ஓடி விட்டது..
எனவே ஜனநாயகன் திரைப்படம் எப்போது வெளியாகும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருபக்கம் தேர்தல் தேதி அறிவித்து விட்டால் ஜனநாயகன் படம் வெளியாகாது எனவும் சிலர் பீதியை கிளப்பினார்கள். இதன் காரணமாக தேர்தலுக்கு பின்னர்தான் படம் வெளியாகுமா என விஜய் ரசிகர்கள் கலக்கமடைந்தனர்..
இந்நிலையில்தான் கடந்த 5ம் தேதி தயாரிப்பாளர் ஜனநாயகன் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த எல்லா வழக்குகளையும் வாபஸ் வாங்கினர். மேலும் மறு தணிக்கைக்கும் விண்ணப்பித்து விட்டனர். அதேநேரம் மீண்டும் எப்போது படம் பார்ப்பார்கள் என்பது பற்றி தணிக்கை வாரியம் இதுவரை எந்த தகவலும் சொல்லவில்லை..
ஏனெனில் புதிதாக படம் பார்ப்பவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். குறிப்பாக இந்த முறை ஒரு ராணுவ அதிகாரி படம் பார்க்க வருகிறார்.. அவருக்கு நேரம் கிடைக்க வேண்டும்.. எல்லாம் அமைந்து அவர்கள் படம் பார்த்து விட்டால் இரண்டு நாட்களில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துவிடும் என்கிறார்கள்..
எல்லாம் சரியாக நடந்தால் இந்த மாதத்திற்குள் ஜனநாயகன் வெளியாக வாய்ப்பிருக்கிறது. அநேகமாக வருகிற 19 அல்லது 20ம் தேதி தேதியில் ஜனநாயகன் வெளியாக அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது..





