விஜய் நடிக்கும் திரைப்படம் ஜனநாயகன். எச்.வினோத் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மமீதா பைஜூ, பிரியாமணி, பாபிதியோல் என பல முக்கிய நடிகர்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து மாபெரும் ஹிட்டடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்தான் ஜனநாயகன்.
அதனால் தமிழில் இந்தப் படத்தை பார்க்க ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். விஜய்க்கு இது கடைசி படமாகும். அதன் பிறகு தன்னுடைய முழு நேரத்தையும் அரசியலில்தான் கழிக்க இருக்கிறார். வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தன்னை தயார்படுத்தி வருகிறார் விஜய். ஆளுங்கட்சியான திமுகவை இதுவரை யாரும் இந்தளவு விமர்சித்ததே இல்லை. ஏன் எதிர்க்கட்சியான அதிமுக கூட இப்படி கடுமையாக சாடியதே இல்லை.
ஆனால் திமுகவை விஜய் சரமாரியாக திட்டி பேசி வருகிறார். அதனால் விஜய்க்கும் திமுகவிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில் இன்று மலேசியாவில் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற இருக்கிறது. அதற்காக நேற்றிலிருந்தே சென்னையில் இருந்து பல பிரபலங்கள் மலேசியா நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர்.
நேற்றே விஜய் மலேசியா சென்று விட்டார். அங்கு தடபுடலாக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது இசை வெளியீட்டு விழா மாதிரி இல்லாமல் பெரிய கச்சேரி மாதிரியும் இந்த விழா நடைபெற இருக்கிறது. விஜய் நடித்த படங்களின் குறிப்பிட்ட படங்களின் பாடல்கள் பாட இருக்கின்றனர். இதுவரை ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா இந்தளவு பிரம்மாண்ட முறையில் நடந்ததே இல்லை.
கிட்டத்தட்ட 80000 பேர் உட்கார்ந்து பார்க்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இப்படி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் விழா கொஞ்சம் கலகலப்பாக இருந்தால்தானே நன்றாக இருக்கும். அதன் முழு பொறுப்பு அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகும் தொகுப்பாளர்கள் கையிலும் இருக்கிறது. அதனால் இந்த விழாவை நான்கு தொகுப்பாளர்கள் தொகுத்து வழங்க இருக்கிறார்கள்.

ஒன்று விஜே ரம்யா, நடிகர் ரியோ ராஜ், விஜே கார்த்திக், விஜே அஞ்சனா என கலகலப்பான தொகுப்பாளர்கள்தான் இந்த விழாவை தொகுத்து வழங்க இருக்கிறார்கள். பொதுவாக பெரிய பட விழா என்றாலே டிடி அல்லது கோபி நாத் இவர்கள்தான் தொகுத்து வழங்குவார்கள். ஆனால் இம்முறை நான்கு தொகுப்பாளர்கள் இந்த வேலையை செய்ய இருக்கிறார்கள்.