பொதுவாக சினிமா உலகில் நடிகர்களுக்கிடையே போட்டி, பொறாமை இருக்கும். எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித், சிம்பு- தனுஷ் என சினிமாவில் எப்போதும் போட்டி இருந்து கொண்டே இருக்கும். அதை தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது. ஆனால் சில நேரம் திட்டமிட்டே ஒரு படத்திற்கு எதிராக இன்னொரு படத்தை களமிறக்குவார்கள். அப்படித்தான் ஜனநாயகன் படத்தோடு பராசக்தி வருவதற்கு பின்னணியிலும் சில காரணங்கள் இருப்பதாக சிலர் சொல்கிறார்கள்.
விஜயின் ஜனநாயகன் படம் இந்த மாதம் 9ம் தேதி வரும் நிலையில் பராசக்தி திரைப்படம் 10ம் தேதி வருகிறது. முதலில் பராசக்தியை 14ம் தேதிதான் வெளியிடு திட்டமிட்டிருந்தனர். ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தேதியை மாற்றி விட்டார்கள். இதன் காரணமாக ஜனநாயகன் படத்திற்கு அதிக காட்சிகள் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு.

ஏனெனில் பராசக்தி படத்தை வெளியிடுவது உதய நிதியின் ரெட்ஜெயன்ட் பிக்சர்ஸ். கண்டிப்பாக நிறைய தியேட்டர்களை அவர்கள் தூக்கி விடுவார்கள். எனவே ஜனநாயகனுக்கு ஒரு வாரத்தில் கிடைக்க வேண்டிய வசூலை எடுக்க இரண்டு வாரங்கள் ஆகும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
சரி தியேட்டரில்தான் இந்த பிரச்சனை என்றால் தற்போது டிவியில் இரண்டு படங்களும் மோதவிருக்கிறது. அதாவது வருகிற 4ம் தேதி மலேசியால் பிரம்மாண்டமாக நடந்த ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான நிகழ்ச்சி ஜீ தமிழில் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவை சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறார்களாம்.
ஏற்கனவே விஜய்யுடன் மோதுவதற்காக சிவகார்த்திகேயனை விஜய் ரசிகர்கள் மோசமாக திட்டி வருகிறார்கள். இப்போது டிவியிலும் இரண்டு படங்களும் மோதுவது அவர்களை மேலும் கோபப்படுத்தியிருக்கிறது. வேண்டுமென்றே விஜய் நிகழ்ச்சிக்கு அதிக டி.ஆர்.பி கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக இப்படி செய்கிறார்கள் என அவர்கள் பொங்கி வருகிறார்கள்.
