ஜனநாயகன் ரிலீஸ் தேதிக்கான வியூகம்... பின்னணியில் இவ்ளோ விஷயங்களா?

by sankaran v |   ( Updated:2025-03-24 21:16:08  )
jananayagan
X

#image_title

விஜய் நடிக்கும் 69வது படம் ஜனநாயகன். இதன் ரிலீஸ் தேதி நேற்றே அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா...

ஜனநாயகன் படம் விஜய்க்கு சரியான படம். கடைசி படம் என்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். கோடிகளைக் கொட்டிக் கொடுக்கும் என்பது உறுதி என்றும் பேசப்படுகிறது. விஜய் வந்து கூத்தாடி. யாரோ எழுதி வந்த டயலாக்கைக் கொண்டு வந்து பேசுறாருன்னு சொல்றாங்க. அவங்க ஜூனியர் ஆர்டிஸ்ட் லெவலுக்கு விஜயைப் பேசுறாங்க.

விஜய் இன்னைக்கு 200 கோடி ரூபா சம்பளம் வாங்குறாரு. இப்படியே அவரை விட்டால் கூட குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரைக்கும் இதே இடத்துல இருப்பாரு. ரஜினி ஒரு பக்கம் மாஸ் காட்டுறாரு. ஏறக்குறைய அந்த அளவுக்குத்தான் விஜயும் இருக்காரு.

ஆனா இதை ஒரு நிமிஷத்துல தூக்கிப்போட்டுட்டு வர்றாரு. அதனால அவரோட கடைசி படம் எப்படி இருக்கும்? கேவிஎன் புரொடக்ஷனுக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட். அப்டேட் இப்பவே கொடுக்க வேணாம். ஏன்னா அடுத்த ஆண்டு பொங்கலுக்குத்தான் வருகிறது. அடுத்த வருஷம் என்பதால் இன்னும் கொஞ்சநாள் கழித்து படத்தோட அப்டேட் வரும். அப்போ எதிர்பார்ப்பு அதிகமாகும். கூடுதலா பிசினஸ் இருக்கும்.

விஜய்க்குக் கடைசி படம் என்பதால் ஓபனிங் ஷோ பெரிய அளவில் பிளாக்பஸ்டரா இருக்கும். இந்தப் படம் அரசியல் சம்பந்தமாகவும் இருக்கும். அதுக்குக் கண்டிப்பாக வாய்ப்பு இருக்கு. அதுக்காகத் தான் விஜய் நான் ஆணையிட்டால்னு சாட்டையை எடுத்தார். கிட்டத்தட்ட எம்ஜிஆரின் ரோல்மாடல் மாதிரி அவர் இப்ப வந்துருக்காரு.

jananayagan

jananayagan

எம்ஜிஆருக்கு பெரிய அளவில் பேச்சு வன்மை இல்லை. என் ரத்தத்தின் ரத்தங்களேன்னு சொன்னார். என் மேல் நம்பிக்கை இருந்தால் வாக்களியுங்கள். நான் ஏழைகளுக்கு ஏதாவது நல்லது பண்ணனும்னு நினைக்கிறேன்னாரு. மாஸா ஜெயிச்சிக் காட்டினாரு. அந்த வகையில் விஜய்க்கு இளைஞர்கள் கூட்டம் நிறைய இருக்கு. அதனால அவர்மீது விமர்சனங்கள் விழுது.

2026ல் தேர்தல் நடக்க இருப்பதால் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே விஜய் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விடுவார் என்ற வகையில் படத்தை ஜனவரி 9, 2026 பொங்கலையொட்டி ரிலீஸ் செய்கிறார்கள். இளைஞர்கள், சிறுபான்மையினர், அரசு ஊழியர்கள் என பல தரப்பினரின் வாக்குகளையும் மையமாக வைத்து விஜய் லாவகமாக காய்நகர்த்தி வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story