ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் கடந்த மாதம் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்ட இந்த படத்தை இன்னும் தணிக்கை செய்யப்படாமல் தாமதப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். படத்தில் சில காட்சிகளை நீக்க சொல்லி தணிக்கை குழு உத்தரவிட்டிருந்த நிலையில் அவர்கள் சொன்ன காட்சிகளையும் நீக்கி மீண்டும் தணிக்கை குழுவுக்கு அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் அங்கிருந்து இன்னும் சரியான பதில் வரவில்லை. இதனால் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.
சென்னையை தவிர பிற மாவட்டங்களில் ஜனநாயகன் படத்திற்கான டிக்கெட் ஓப்பனிங் ஆரம்பித்து விட்டது. அதனால் படம் சொன்ன தேதியில் வருமா வராதா என்ற ஒரு பீதியிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்று மதியம் இது சம்பந்தமாக அவசர வழக்காக விசாரிக்க படக் குழு நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள். இந்த நிலையில் பராசக்தி டிரெய்லரும் ஜனநாயகன் படத்தின் டிரெய்லரும் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் மக்களை ரீச் ஆகி இருக்கிறது. ஜனநாயகன் படத்தின் டிரெய்லரை விட பராசக்தி படத்தின் டிரைலர் அதிக பார்வையாளர்களை சென்றடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன் இது பற்றி ஒரு சுவாரசியமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். அவருக்கு நெருக்கமான சில பேர் ஜனநாயகன் படத்தை பார்த்து விட்டதாகவும் அந்தப் படம் எதிர்பார்ப்பையும் மீறி மிக நன்றாக வந்துள்ளதாகவும் படம் பார்த்தவர்கள் கூறினார்களாம். பகவந்த் கேசரி திரைப்படத்தின் ரீமேக் என்று ஆரம்பத்திலிருந்து சொல்லப்பட்டாலும் படம் பார்த்தவர்கள் அந்தப் படத்தின் சில காட்சிகளை மட்டும் தான் பகவத் கேசரி படத்திலிருந்து எடுத்திருக்கிறார்கள் .மீதமுள்ள பெரும்பாலான காட்சிகள் எச் வினோத் சொந்தமாகவே எடுத்திருக்கிறாராம்.
அது பெரிய அளவில் மக்களை சென்றடையும் என்றும் படம் பார்த்தவர்கள் சொன்னதாக அந்தணன் கூறினார். அது மட்டுமல்ல விஜய் அரசியலுக்கு வந்த பிறகு எடுத்த படம் என்பதால் படம் முழுக்க அரசியல் வசனங்கள் அனல் தெறிக்க வந்திருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் விஜய் கெரியரில் அவர் நடித்த படங்களிலேயே ஜனநாயகன் திரைப்படம் தான் அவருக்கு ஒரு பெரிய உச்சமாக இருக்கும். அந்த அளவுக்கு படம் வந்திருப்பதாகவும் படம் பார்த்தவர்கள் கூறினார்களாம். பராசக்தி படத்தின் டிரைலர் ஒரு பக்கம் மக்களை பெரிய அளவில் ரீச் ஆனாலும் அந்தப் படத்திற்கு முன் ஜனநாயகன் படம் எல்லாம் தூசு என்று சொன்னவர்களுக்கு தெரியும், அந்தப் படம் எப்படியாக வந்திருக்கிறது என்று.
எதிர்பார்க்காத அளவு ஜனநாயகன் படத்தில் பல விஷயங்கள் இருப்பதாகவும் படம் பார்த்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதனால் இன்னும் மூன்று தினங்கள் இருக்கின்றன அதுவரை பொறுமையாக இருப்போம் என அந்தணன் கூறினார். அது மட்டுமல்ல ஒரு சில இடங்களில் ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஒரு டிக்கெட்டின் விலை 7000 வரை வாங்குவதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஏஜிஎஸ் போன்ற பெரிய திரையரங்குகளில் ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் வசூல் செய்வதாகவும் சொல்லப்படுகிறது. முதல் நாள் காட்சி என்பதால் ரசிகர்கள் எவ்வளவு அதிகப்படுத்தினாலும் அதை வாங்க ரெடியாக இருக்கும் பட்சத்தில் டிக்கெட்டின் விலை என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டாவே இருக்காது என்பதுதான் உண்மை.
