தேர்தல் சமயத்துல பராசக்தி…. இதுல ஏதாவது உள்குத்து இருக்கா? எஸ்.கே. சந்தர்ப்பவாதியா?

by sankaran v |   ( Updated:2025-04-05 22:22:36  )
sk
X

sk

சன்டிவியைப் பொருத்தவரை கொள்கை வேறு. வியாபாரம் வேறு என்பதில் ரொம்ப தெளிவா இருப்பாங்க. விஜய் அரசியலுக்கு வரப்போறேங்கறதை அறிவிச்சி பல வருடங்களுக்கு அப்புறம் கூட படம் எடுத்துக்கிட்டு இருக்காங்க. ஜனநாயகனைப் பொருத்தவரை விஜயின் கடைசி படம். எல்லாரும் பார்ப்பாங்க அப்படிங்கறதால வாங்கிருப்பாங்கன்னு நினைக்கிறேன். அது இன்னும் உறுதியாகல என்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி.

டிஜிட்டல் வியாபாரம் அமேசானுக்கு 121 கோடி வரை போயிருக்கு. சாட்டிலைட் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கல. ஒருவேளை 85 கோடிக்கு சன்டிவிக்கு கொடுத்து இருக்கலாம். கமலை வச்சி எச்.வினோத் தலைவன் இருக்கின்றான் என்ற படத்தை இயக்கலாம் என இருந்தாரு.

ஆனால் கமலுக்குத் தொடர்ச்சியாக படங்கள் இருந்ததால இதைத் தள்ளி வச்சாரு. அந்த சமயத்துல விஜய்க்கிட்ட இருந்து எச்.வினோத்துக்கு அழைப்பு வந்ததால இந்தப் படத்துல சில விஷயங்களை மாற்றி விஜய்க்கு ஏற்ப எழுதினாரு. படத்தையும் அரசியல் ரீதியா எடுத்துருக்காருன்னு நினைக்கிறேன் என்கிறார் பிஸ்மி.

jananayagan vs parasakthiஜனநாயகன், பராசக்தி ரெண்டும் ஒரே நேரத்துல ரிலீஸ் ஆகுமா? இதுல அரசியல் இருக்கு. அதுல எஸ்கே. மாட்டிக்கிட்டாரா என்ற கேள்விக்கு அது சிவகார்த்திகேயனைப் பற்றித் தெரியாதவங்க சொல்வாங்க. அவர் மிகப்பெரிய சந்தர்ப்பவாதி. சிவகார்த்திகேயனைப் பற்றி தெரிந்தவரை நான் சொல்கிறேன். பராசக்தியை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்குது. அவங்களுக்கு முதுகெலும்பா இருப்பது ரெட்ஜெயண்ட் நிறுவனம். விஜய் படம் பொங்கலுக்கு வருது.

அதே நேரத்துல பராசக்தி வர வாய்ப்பு இருக்கு. அது ரெட்ஜெயண்ட்டுக்கு ஒரு நோக்கமாக இருக்கு. ஏன்னா முதல் நாளில் விஜய் படம் தனியா வந்ததுன்னா 1100 தியேட்டர்ல வரும். பெரிய அளவில் கலெக்ஷன் ஆகும். விஜயின் கடைசி படம் வசூல் சாதனைன்னு வரலாறுல இடம்பிடிக்கும். அது நடக்கக்கூடாது. நாம உள்ளே புகுந்து பாதி தியேட்டரை எடுத்துடணும். அப்படி நடந்தா ஜனநாயகன் படத்தோட முதல் நாள் வசூல் சாதனையை அடிச்சி காலி பண்ணிடலாம்.

இன்னொரு நோக்கம் பராசக்தி படம் 60களில் நடந்த இந்தி எதிர்ப்பைப் பற்றிப் பேசுற படம். அது திமுகவுக்கு மிகப்பெரிய மைலேஜா இருக்கும். விஜயின் கடைசி படம் தோல்விப்படம்னு நிரூபிக்கணும். அதுதான் அவர்களது நோக்கம். இது சிவகார்த்திகேயனுக்குத் தெரியாதா?

என் படத்தை வச்சி இப்படி ஒரு வேலையைப் பார்க்காதீங்கன்னு சொல்லலாம். கோட் படத்துல விஜய்தான் துப்பாக்கியைக் கொடுத்தவரு. அப்படி இருந்தும் தன்னோட படம் விஜய் படத்தை தோல்வி அடையச் செய்து என் படம் ஜெயிச்சதுன்னு இவர் காட்டணும். அதுக்கு இவர்கள் சண்டையை சிவகார்த்திகேயன் பயன்படுத்திக்கிட்டாரு. என்றும் பிஸ்மி தெரிவித்துள்ளார்.

Next Story