Jananayagan: ஜனநாயகனில் 40 பஞ்ச் டயலாக்குகள்… அனல் பறக்கப் போகுதாம்..!

by sankaran v |   ( Updated:2025-04-03 20:23:34  )
jananayagan
X

#image_title

ஜனநாயகன் படம் விஜய்குக் கடைசி படம். அதனால் இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். படத்தின் ஓடிடி உரிமை குறித்தும் படத்தைப் பற்றியும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு சில தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு இணையாக விஜய் 250 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார். இந்த நிலையில் அரசியலில் முழுநேரமாக இறங்க வேண்டும் என்பதற்காக அந்த சம்பளத்தையும் துச்சமாக மதித்து விட்டு படத்திற்கு முழுக்கு போட்டுவிட்டு இறங்குகிறார். அப்படின்னா கடைசி படத்துக்கு எவ்ளோ முக்கியத்துவம் இருக்கும் என இப்போதே பலரும் எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.

அதனால அவரது படத்துக்கும் பிசினஸ் தாறுமாறாக போய்க் கொண்டு இருக்கிறது. ஓவர்சீஸ்ல மட்டும் 70 கோடிக்கும், அமேசானில் 121கோடிக்கும், சன்டிவியில் 68 கோடிக்கும் விற்பனை ஜரூராகப் போயுள்ளதாம். அதே போல மாஸ்டர் படத்தை வாங்கிய 7ஸ்க்ரீன் பிக்சர்ஸ் நிறுவனமும் 100 கோடி ரூபாய் வரைக்கும் வாங்கியிருப்பதாக ஒரு தகவல். மொத்தம் 370 கோடி வரை பிசினஸ் போய்விட்டதாம். ரஜினி நடித்த கூலி படத்தின் ஓடிடி உரிமைத்தொகையை விட ஒரு கோடி அதிகமாம்.

இந்தப் படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். கமலின் தலைவன் இருக்கிறான் படத்தைத் தான் மாற்றி இருக்கிறார். இந்தப் படம் விஜய்க்கு அரசியல் பிரச்சார படமாகவே இருக்கும் என்று தெரிகிறது. இது சர்க்கார் மாதிரி அல்ல. வாக்கு அரசியல் பேசுமாம். படத்தில் 40 பஞ்ச் டயலாக்குகள் ரெடியாக இருக்கிறது என்கிறார்கள். இதற்காகவே உதவி இயக்குனர்களிடம் வேலை வாங்கி இருக்கிறார்களாம்.

jananayagan posterபடத்தில் விஜய் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பஞ்ச் டயலாக்குகள் பேச இருப்பதால் திரையரங்கமே தீப்பிடிக்கும் அளவு ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரிப்பார்கள் என்று தெரிகிறது. அதே நேரம் கமல் திமுக கூட்டணிதான். என்றாலும் விஜய்க்கு எதிராக ஒருபோதும் செயல்படமாட்டார் என்றும் சொல்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு படத்தில் ரெண்டு மூணு பஞ்ச் டயலாக்குகள் தான் வரும். அதுவே தெறிக்க விடும். ஆனால் இந்தப் படத்தில் 40 பஞ்ச் டயலாக்குகள் என்கிறார்கள். விஜய் வரும்போதெல்லாம் பஞ்ச் தான் என்றே தெரிகிறது. அந்த வகையில் இந்தப் படம் படுமாஸாக வேற லெவல் விஜய் படமாக இருக்கும் என்றே தெரிகிறது.

Next Story