ச்சே!.. கருமம்.. கருமம்!.. நம்ம மைண்ட் அங்க போகுதே!.. ஸ்ரீதேவி மகள் பார்த்த வேலையை பார்த்தீங்களா?..

by Saranya M |   ( Updated:2024-04-10 10:07:22  )
ச்சே!.. கருமம்.. கருமம்!.. நம்ம மைண்ட் அங்க போகுதே!.. ஸ்ரீதேவி மகள் பார்த்த வேலையை பார்த்தீங்களா?..
X

தயாரிப்பாளர் போனி கபருக்கும் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் மகளாக பிறந்தவர் ஜான்வி கபூர். பாலிவுட்டில் வாரிசு நடிகையாக அறிமுகமான இவர், தற்போது தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மராத்தியில் வெளியான சைரட் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார் ஜான்வி கபூர். தடக் எனும் அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த நிலையில், அடுத்தடுத்து பல ரீமேக் படங்களில் நடித்து பிரபல நடிகையாக மாறினார்.

இதையும் படிங்க: இப்படித்தான் அந்த பாட்டுக்கு மியூசிக் போட்டாரா இளையராஜா?!.. அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!..

மலையாளத்தில் வெளியான ஹெலன், நயன்தாரா நடிப்பில் தமிழில் வெளியான கோலமாவு கோகிலா என தொடர்ந்து ரீமேக் குயின் ஆகவே ஜான்வி கபூர் மாறினார்.

தென்னிந்தியாவில் தனது அம்மாவைப் போல தனக்கும் வரவேற்பு இருப்பதை அறிந்து கொண்ட ஜான்வி கபூர் டோலிவுட்டில் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் தேவரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்ததாக ராம்சரண் ஜோடியாக ஆர்சி 16 படத்தில் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க: கமலுக்கு பதில் என்னை அந்த படத்துல ஹீரோவா புக் பண்ண பாலசந்தர்!.. நிழல்கள் ரவி சொன்ன சீக்ரெட்!..

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்து வரும் ஜான்வி கபூர் தற்போது கோடை வெப்பத்தை தணிக்க முடியாமல் தவித்து வருகிறேன் என நீச்சல் உடையில், வெளியிட்ட தாறுமாறான புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முகத்தில் ஃபேஸ் மாஸ்க் போட்டுக்கொண்டு ஜான்வி கபூர் கொடுத்துள்ள போஸை பார்த்த ரசிகர்கள் இது வேறு மாதிரியாக தெரிகிறது என டபுள் மீனிங்கில் கலாய்த்து கருமம்.. கருமம்.. என ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தேசிய விருதை தட்டி தூக்கிய தமிழ் படங்களின் லிஸ்ட்!.. மனதை வென்ற மண்டேலா!

Next Story