தேசிய விருதை தட்டி தூக்கிய தமிழ் படங்களின் லிஸ்ட்!.. மனதை வென்ற மண்டேலா!

திரைப்படங்கள் என்பது பொழுதுபோக்கிற்காக மட்டும் எடுக்கப்படாமல் நல்ல கருத்துக்கள் மையமாக கொண்டு, பார்ப்பவர்களுக்கு பாடமாக மாறி, பல்வேறு விருதுகளை வாங்கி சாதனைகளையும் படைத்துள்ளது. இப்படி தேசிய விருதினை வென்ற தமிழ் படங்கள் பற்றிய பார்வை. "எம்.ஜி.ஆர்" நடிப்பில் வெளிவந்த 'மலைக்கள்ளன்' படம், அந்த அந்த காலத்திலேயே தேசிய விருது பெற்றது.

national award1

national award

வசனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, ஆங்கிலேய எதிர்ப்பை காட்டிய வரலாற்று திரைப்படமான "வீரபாண்டிய கட்டபொம்மன்". 'செக்கிழுத்த செம்மல்' வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை குறிப்பை காட்டிய "கப்பலோட்டிய தமிழன்", "திருவிளையாடல்" படங்களும் இந்த வரிசையில் இடம் பெற்று தேசிய விருதினை பெற்றிருந்தது.

நகைச்சுவை நடிகராக இருந்த நாகேஷை வைத்து கே.பாலச்சந்தர் இயக்கிய "சர்வர் சுந்தரம்", கதாநாயகனாக முத்துராமன் நடித்திருக்க, அவருக்கு இணையான ஒரு வேடத்தில் நாகேஷ் நடித்திருப்பார். 'பார்க்காமலேயே காதல்' என்கின்ற வித்தியாசமான கதை அம்சத்தை கொண்டு அஜித்குமார் - தேவயானி நடித்த "காதல் கோட்டை" படம் தேசிய விருது பெற்றது.

இயக்குனரும், நடிகருமான பார்த்திபனின் "ஹவுஸ்புல்", கல்வி கற்றலை மையமாகக் கொண்டு வெளிவந்து, அதன் முக்கியத்துவத்தை உணர்த்திய "வாகை சூடவா" திரைப்படமும் தேசிய விருது பெற்ற பட்டியலில் இணைந்தது.

பெண் வன்கொடுமைக்கு எதிராக எடுக்கப்பட்ட வழக்கு எண் 18ன்கீழ் 9, புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்ட இந்த படமும் தேசிய விருது பெற்றிருந்தது. அருண்குமார், ஷியாம் 'குட்டி' ராதிகா இணைந்து நடித்த "இயற்கை" திரைப்படமும் தேசிய விருது பெற்ற படங்களில் ஒன்று.

national award2

national award2

தனுஷ் நடிப்பில் வெளியாகி வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி அடைந்த "அசுரன்" திரைப்படம். சூர்யா நடித்த "வாரணம் ஆயிரம்", "சூரரை போற்று", விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தி, விவசாயிகளுடைய கஷ்ட,நஷ்டங்களை தெரிவித்த "கடைசி விவசாயி", யோகிபாபுவின் மண்டேலா, சட்டம், அரசியல் குறித்த கதையோடு வந்த "ஜோக்கர்" படங்களும் தேசிய விருதினை பெற்றது.

 

Related Articles

Next Story