Connect with us

Cinema News

ஜப்பான் டிரெய்லரில் திமிங்கலம் கதை சொன்ன கார்த்தி!.. நல்லவேள சுறா கதை சொல்லல என கலாய்க்கும் ஃபேன்ஸ்!..

தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் ஒட்டுமொத்தமாக ஒரு இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட உடனே குவிந்து விட்டனர். நடிகர் கார்த்தி மற்றும் சூர்யா கலந்து கொண்ட ஜப்பான் இசை மற்றும் டிரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், எச். வினோத், சிறுத்தை சிவா மற்றும் நடிகை தமன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல், சுனில் மற்றும் கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் வெளியாகி உள்ள ஜப்பான் படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இதையும் படிங்க: இன்னொரு தபா அஜித் படம் பண்ணுவீங்களா!.. சிறுத்தை சிவா ரியாக்‌ஷன் தான் செம!.. ரொம்ப அடிவாங்கியிருப்பாரோ?..

அம்மாவுக்காக குட்டி மீன் சின்ன சின்ன திருட்டை பண்ண ஆரம்பித்தது என்றும் பெருசாகி திமிங்கலம் ஆகிய அந்த மீனை பிடிக்க சுறா, கொடுவா என மத்த மீன்கள் எல்லாம் சுத்துப் போட திமிங்கலம் பிடிபட்டதா? இல்லையா? என்பதை கதையாக சொல்லி காட்சிகளாக டிரெய்லரை கொடுத்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான லியோ படத்திலும் சீரியல் கில்லர் கதையை நடிகர் விஜய் சொல்லும் படியாகவே டிரெய்லர் அமைக்கப்பட்டிருந்த நிலையில், ஜப்பான் டிரெய்லரும் அதே போல ஸ்டோரி நரேஷனுடன் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த படம்- ஐயா தலைவரே! தெரிஞ்சுதான் சொன்னீங்களா? லியோ குறித்து ரஜினி கருத்து

அனு இமானுவேலை கடத்திக் கொண்டு ஜப்பான் செல்வதும், இருவருக்கும் இடையே மோதலும் காதலும் என செல்வது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் கே.எஸ். ரவிக்குமார் போலீஸ் அதிகாரிகளாக வந்து ஜப்பானை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக டிரெய்லர் உருவாகி உள்ளது. டிரெய்லர் ரொம்பவே சுமாராகத்தான் இருக்கு என்றும் தீபாவளிக்கு ஜப்பான் படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை மிஞ்சுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்கின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top