Cinema News
ஆளப்போறான் தமிழன் மகனுக்கு தமிழ் தெரியாதா?!.. விஜய் மகனால் விழி பிதுங்கும் லைக்கா..
Jason sanjay: விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். ‘வேட்டைக்காரன்’ படத்தில் விஜயுடன் நடனமாடியிருப்பார். இப்போது லண்டனில் அம்மா, தாத்தவுடன் வசித்து வருகிறார். விஜயை போலவே விஸ்வல் கம்யூனிக்கேஷன் படித்தவர். ஆனால், படித்தது பயிற்சி எடுத்தது எல்லாமே லண்டனில்தான்.
சில நாட்களுக்கு முன்பு லைக்கா நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ளதாக செய்தி வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. விஜயின் மகன் நடிகராக வருகிறார் என்று சொன்னால் இந்த ஆச்சர்யம் இருந்திருக்காது. இயக்குனர் என்றதும். இயக்கம் பற்றி அவருக்கு என்ன தெரியும் என பலருக்கும் கேள்வி எழுந்தது.
இதையும் படிங்க: ரஜினிக்கு எழுதிய கதையில் நடித்த விஜய்!.. அட அந்த மாஸ் படமா?!.. தெரியாம போச்சே!..
சஞ்சய் விஸ்வல் கம்யூனிக்கேஷன் முடித்துவிட்டு நண்பர்களுடன் இணைந்து சில குறும்படங்களை இயக்கியிருக்கிறார். ஒரு நிமிட குறும்படம் கூட சில வருடங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால், அது யாருக்கும் பிடிக்கவில்லை. இந்நிலையில்தான், இப்போது சினிமா இயக்குனராக உருவெடுத்திருக்கிறார். ஆனால், எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போலத்தான் விஜய் இருக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் பூஜையும் நடந்துள்ளது. இதில் விஜய் கலந்துகொள்ளவில்லை. இப்போது இந்த படத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்திற்குள் கதையை எழுதி முடித்துவிடுகிறேன் என சொன்ன ஜேசன் இப்போது டிசம்பர் மாதத்தில் முடித்துவிடுகிறேன் என சொல்கிறாராம்.
இதையும் படிங்க: திரையுலகில் திடுக்கிடும் பாலியல் புகார்கள்… தொடர்வதன் பின்னணி ரகசியம் இதுதானா…?
அதோடு, அவருக்கு தமிழ் எழுத, படிக்க வாராது என்பதால் கதையை முழுக்க ஆங்கிலத்திலேயே எழுதுகிறாராம். எனவே, அவர் எழுத எழுத ஒருவர் அதை தமிழில் மொழிபெயர்த்து எழுதிக்கொண்டிருக்கிறாராம். அப்பா தமிழ் பட நடிகர். ஆளப்போறான் தமிழன் என சினிமாவில் பாடி நடிப்பவர்.
ஆனால், அவரின் மகன் சஞ்சய்க்கு தமிழ் எழுத படிக்க தெரியாது. போகுற போக்கை பார்த்தால் ஜேசன் ஆங்கில படம்தான் எடுப்பார் போல என சிரிக்கிறது திரையுலகம்.
இதையும் படிங்க: இந்த வாரம் செம வேட்டை தான் போல… அண்ணன் வரார் வழி விடு.. இந்த வார ஓடிடி அப்டேட்..!