கோலிவுட்டில் இன்றைய இணையத்தினை முழுசாக ஆக்கிரமித்து இருப்பார் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தான். லைகா ப்ரோடக்ஷன் தயாரிப்பில் இயக்குனராக களமிறங்கி இருக்கிறார். இப்படம் குறித்த மேலும் பல சுவாரஸ்ய தகவல்கள் தொடர்ந்து கசிந்து கொண்டே இருக்கிறது.
விஜயின் தவப்புதல்வன் ஜேசன் சஞ்சய். பெரும்பாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் இவரை அறிந்து வைத்தது இப்படி தான். ஆனால் சஞ்சய் சினிமாவிற்கு படித்து வருகிறார். சில ஆவணப்படங்களை இயக்கி இருக்கிறார் என அவ்வப்போது சில தகவல்களும் வெளிவரும்.
இதையும் படிங்க: அப்பன் தயவே வேண்டாம்!.. அம்மாவுக்கு செஞ்ச துரோகம்!.. பழிவாங்க களத்தில் குடித்துள்ளாரா வாரிசு?..
இப்படி இருக்க முதல் படமே மாஸ் அறிவிப்பாக லைகா தயாரிக்கும் படத்தினை ஜேசன் இயக்குகிறார் என்ற தகவலால பலரும் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றனர். கண்டிப்பாக ஜேசன் சொன்ன கதை வலுவாக இருந்ததாலே லைகா ஒப்புக்கொண்டிருக்கலாம்.
விஜயின் பேருக்காக மட்டுமே இத்தனை பெரிய நிறுவனம் அவரை தங்களுடைய படத்தினை இயக்க ஒப்புக்கொள்ளாது என பலரும் கிசுகிசுத்து வருகின்றனர். சரி படத்த அறிவிச்சாச்சு அடுத்தக்கட்டமாக நடிகர்கள் டெக்னிஷியன்கள் குறித்த பல புதிய தகவல்கள் கசிந்து வருகிறது.
இதையும் படிங்க: சந்திரமுகி 2-வில் ரஜினி நடிக்காமல் போனதற்கு காரணம் ஷங்கர் – என்னப்பா சொல்றீங்க!..
அதாவது ஜேசன் சஞ்சய் இயக்க இருக்கும் இப்படத்தில் நடிகராக துருவ் விக்ரம் நடிக்க ஏ.ஆர்.அமீன் இசையமைப்பு செய்யலாம் என்ற ஒரு ஆச்சரிய தகவல்கள் கசிந்தது. ஏற்கனவே சஞ்சயின் பிறந்தநாளுக்கு அமீன் வாழ்த்துக்கள் சொன்னது கூட இணையத்தில் வைரலாக பரவியது.
இது ஒரு பக்கம் இருக்க, விஜய் சேதுபதியை தான் ஜேசன் முதலில் இயக்க போகிறார். அதற்கான பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளிவரலாம். மற்ற படங்களை விட லைகா தற்போது இந்த படத்துக்கு பெரிய ப்ரோமோஷனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக பொங்கல்,…
இறுதிச்சுற்று சூரரைப்போற்று…
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…