டாடி வேணாம் டாடா போதும்… ஹீரோவை டிக் அடித்த ஜேசன் சஞ்சய்… செம வாழ்க்க தான்!
Jason hero: இயக்குனராகி இருக்கும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் படத்தின் மீது இப்போதே எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. லைகா தயாரிக்கும் இப்படத்தின் அடுத்தக்கட்ட பணிகளும் தொடர்ச்சியாக நடந்து வருவது குறித்த முக்கிய தகவல்களும் வெளியாகி இருக்கிறது.
முறையாக திரைப்படத்துக்கு படித்து விட்டு சென்னை திரும்பி இருக்கும் ஜேசன் சஞ்சயை தங்களுடைய படத்தின் இயக்குனராக அறிமுகப்படுத்தியது லைகா. இதற்கு முக்கிய காரணம் சங்கீதா விஜயின் தந்தை என்று கூறப்படுகிறது. மிகப்பெரிய பணக்காரரான அவரும் சுபாஸ்கரனும் நெருங்கிய நண்பர்களாம்.
இதையும் படிங்க: பாடல் வரிகளை பார்த்து நாள் முழுவதும் அழுத எம்.எஸ்.வி!.. எந்த பாடல் தெரியுமா?…
தன்னுடைய பேரனுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். செலவை தான் பார்த்து கொள்கிறேன் என கோரிக்கை வைத்ததன் பேரிலே இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறதாம். சமீபகாலமாக கம்மி பட்ஜெட்டில் லைகா தயாரித்த படங்கள் எல்லாமே ப்ளாப் பட்டியலில் சேர்ந்து விட்டதால் மற்ற புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமலே இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜேசன் படத்தின் ஒன்லைன் மட்டும் தான் சொன்னதாகவும், திரைக்கதையை தற்போது தான் எழுதி வருகிறார். அவருடன் அனுபவ அசோசியேட்கள் சிலர் இணைந்து இருக்கின்றனர். விரைவில் அந்த பணிகள் முடிக்கப்படும்.
இதையும் படிங்க: எங்க அப்பா செஞ்சதெல்லாம் இனிச்சிதா? பிரச்னையை முடிக்க சொன்னா லிஸ்ட் போட்டு குட்டு வாங்கும் கதிஜா ரஹ்மான்…
நாயகனாக நடிக்க கவினை புக் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மினிமம் கியாரண்டியில் உருவாக இருக்கும் இப்படத்தில் பெரிய நடிகர்களை டிக் செய்து சூடுபட்டுக்கொள்ள முடியாது என்ற முடிவில் லைகா இருக்கிறதாம். இதனாலே, சமீபத்தில் டாடா படத்தில் சிறப்பான நடிப்பை காட்டிய கவின் புக் செய்யப்பட இருக்கிறார்.
மேலும், மியூசிக் டைரக்டராக அனிருத்தினை தேர்வு செய்யலாம் என லைகா ஐடியா கொடுத்து இருக்கிறது. சமீபகாலமாக டாப் நாயகர்களுக்கு இசையமைத்து வரும் அனிருத்தை புக் செய்தால் படத்திற்கு ப்ரோமோஷனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.