ஜேசன் சஞ்சய் லைக்காவுடன் இணைய காரணமாக இருந்தவர் இவர்தானாம்! ரகசியமாக நடந்த மீட்டிங்

Jason Vijay: தமிழ் சினிமாவில் விஜய் ஒரு மாபெரும் நடிகராக அறியப்படுகிறார். வசூலிலும் விஜய்தான் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறார். நாளுக்கு நாள் விஜயின் மார்கெட் உயர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. சமீபத்தில் வெளியான லியோ திரைப்படமும் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

அடுத்ததாக வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். அந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்தப் படத்திற்கு பிறகு கொஞ்சம் பிரேக் எடுத்துவிட்டு தனது அரசியல் பணிகளை கவனிக்க போவதாக தகவல்கள் வெளியானது.

இதையும் படிங்க: அஜித் சொல்லித்தான் அந்த படத்தில் நடித்தேன்!.. பல வருடங்கள் கழித்து ரகசியம் சொன்ன ஜெய்!…

அந்த இடைப்பட்ட காலத்தில் தனது மகனை சினிமாவிற்குள் கொண்டுவந்தால் தன்னையும் ரசிகர்கள் மறக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில் தான் சரியான நேரத்தில் தன் மகனான ஜேசன் விஜயை இயக்குனராக களமிறக்கியிருக்கிறார் விஜய் என ஒரு பக்கம் செய்திகள் கசிந்தது.

அறிமுகமாகும் முதல் படமே பெரிய நிறுவனத்துடன் ஜேசன் கைகோர்ப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு வேளை விஜயின் தலையீடாக கூட இருக்கலாம் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் உண்மையிலேயே லைக்காவுடன் ஜேசனை இணைத்ததற்கு முழு காரணமாக இருந்தவர் விஜயின் மனைவி சங்கீதாதான் என சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: நீங்க இந்த மாதிரி நடிக்கலாமா?!.. அறிவுரை சொன்ன பெண்மணி!.. மன்னிப்பு கேட்ட ரஜினி!…

சங்கீதா சொன்னதின் பேரில் தான் லைக்கா ஜேசனை தன்னுடைய நிறுவனத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் செய்கிறதாம்.மேலும் ஜேசன் இயக்கத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

ஒரு பக்கம் துருவ் விக்ரம், கவின், அதர்வா என பல இளம் ஹீரோக்களின் பெயர்கள் அடிபட்டிக் கொண்டிருக்கின்றன. இன்னும் கூடிய சீக்கிரம் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: படம் எப்படி வேணா இருக்கட்டும்! இத மட்டும் வாங்கிக் கொடுங்க!. – தயாரிப்பாளரிடம் லோகேஷ் கேட்ட பரிசு

 

Related Articles

Next Story