என்னடா இது லேடி சூப்பர்ஸ்டாருக்கு வந்த சோதனை!.. நயன்தாராவுக்கு நறுக்கென குட்டு வைத்த ஷாருக்கான்!..

Published on: September 7, 2023
---Advertisement---

ஜவான் படத்தில் நடிகை நயன்தாராவின் பட்டத்தை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பறித்து விட்டது படத்தை பார்த்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீசாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. நடிகை நயன்தாரா இந்த படத்தில் நர்மதா என்னும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

Also Read

இதையும் படிங்க: 4 விஜய் படம் பார்த்த மாதிரி இருக்கு!.. ஷாருக்கானை தளபதியா மாற்றிய அட்லீ.. ஜவான் விமர்சனம் இதோ!

லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்துக்கு பில்லா படத்துக்கு பிறகு ஆக்சன் காட்சிகளில் ஜவான் படத்தில் தான் நயன்தாரா அதிர வைத்துள்ளார். ஆனால், தமிழ் படங்களில் கெத்தாக லேடி சூப்பர் ஸ்டார் என்கிற டைட்டிலை பயன்படுத்தும் நயன்தாராவுக்கு ஷாருக்கானின் ஜவான் படத்தில் அந்த டைட்டிலை பயன்படுத்த அனுமதி கொடுக்கவில்லை.

நடிகர் ஷாருக்கான் எந்த ஒரு பட்டத்தையும் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளாத நிலையில், ஜவான் படத்தில் ஷாருக்கானின் பெயருக்கு அடுத்து நயன்தாராவின் பெயரும் எந்த ஒரு பட்டமும் இல்லாமலே இடம்பெற்றுள்ளது.

இதையும் படிங்க: குருநாதர் ஷங்கரையே இட்லியா தூக்கி சாப்பிட்ட அட்லீ!.. தமிழ் சினிமா இயக்குனர்களிலேயே இப்போ இவர் தான் டாப்!

பாலிவுட்டில் நடிகை நயன்தாரா அறிமுகமாகியுள்ள முதல் படம் என்பதால் நயன்தாராவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்கிற டைட்டிலை படத்தில் பயன்படுத்தினால் பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோன், ஆலியா பட் உள்ளிட்டோர் சண்டைக்கு வந்து விடுவார்களோ என்பதால் நயன்தாராவுக்கு லேடிஸ் சூப்பர் ஸ்டார் பட்டத்தை வழங்கவில்லையா என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

ஷாருக்கான் படத்தில் பெரிய சம்பளம் கிடைத்துள்ள நிலையில் முக்கியமா பட்டம் முக்கியமா என்னைப் பார்த்தால் பணம் தான் முக்கிய ரீதியில் நடிகை நயன்தாரா தனது பட்டத்தையும் விட்டுக்கொடுத்திருப்பார் என்கிற ட்ரோல்களும் சோசியல் மீடியாவில் வளம் வருகின்றன.