Rajini Red Card Issues: இன்று சினிமாவில் பெரும் பேசுபொருளாக இருப்பது நடிகர்களுக்கு வழங்கப்பட்ட ரெட் கார்டு சம்பவம் பற்றிதான். அதுவும் இன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிம்பு, தனுஷும் இந்த லிஸ்ட்டில் இருப்பது மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தயாரிப்பாளர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சரியான நேரத்தில் கால்ஷீட் கொடுக்காமல் அலைக்கழிப்பது, வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி தராமல் இருப்பது என இந்த நடிகர்களின் மீது ரெட் கார்டு வழங்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் அது உண்மையா? அப்படி நடந்தது உங்களுக்கு தெரியுமா? என்ற அதிர்ச்சி தகவலை கிளப்பியிருக்கிறார் திருச்சி திரையரங்க உரிமையாளர் ஸ்ரீதர்.
இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மானால் பறிபோன படவாய்ப்பு.. காலை வாரிய துருவ் விக்ரம்.. ஹிட்டு கொடுத்தும் புலம்பும் இயக்குனர்…
இது சம்பந்தமாக தயாரிப்பு கவுன்சிலில் இருந்து எந்தவொரு முறையான அறிவிப்பும் வெளிவராத நிலையில் ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்றும் தயாரிப்பு கவுன்சிலில் இருந்து எங்களுக்கு எப்போது அறிவிப்பு வருகிறதோ நாங்களும் தயாரிப்பு கவுன்சிலிற்கு முழு ஆதரவும் கொடுப்போம் என்றும் கூறினார். மேலும் இதே போல் ஒரு ரெட் கார்டு விஷயத்தில் ரஜினி சிக்கிய சம்பவம் குறித்து கேட்ட போது பல திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்தார் ஸ்ரீதர்.
அதாவது ரஜினிக்கு ரெட் கார்டு அறிவித்த சமயத்தில் ரஜினி திரையரங்க உரிமையாளர்களிடம் பேசி உழைப்பாளி படத்தை நேராக திரையரங்கில் ரிலீஸ் செய்தததாக ஒரு செய்தி வெளிவந்தது. ஆனால் அந்த மாதிரி எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று ஸ்ரீதர் கூறினார். உழைப்பாளி படத்திற்கு முன்னாடியே செங்கை , காஞ்சிபுரம் வினியோகஸ்தரர் சங்கத்தலைவராக இருந்த சிந்தாமணி முருகேஷன் என்பவர்தான் ரஜினியின் படத்திற்கு ரெட் கார்டு அறிவித்திருந்தார்.
இதையும் படிங்க: கமல் வச்ச கன்னிவெடி!.. 150 கோடி கொடுத்தும் இப்படியா?!.. பிரபாஸுக்கு நேரமே சரியில்ல…
அந்த சமயத்தில்தான் நாகி ரெட்டி உழைப்பாளி என்ற படத்தை அறிவிக்க என்ன செய்வது என விழிபிதுங்கி இருந்தார்கள்.அப்போது திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவராக இருந்தவர் டி.ராமானுஜம். உடனே அவர் ஒரு கூட்டத்தை கூட்டினாராம். அந்த கூட்டத்திற்கு ரஜினி, விஜயகாந்த், கமல், சத்யராஜ், கார்த்திக், பிரபு போன்ற நடிகர்களும் கலந்து கொண்டார்களாம்.
திரைப்பட வினியோகஸ்தரர் சங்கம் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றாலும் அவருடைய படம் எங்களுக்கு நேரடியாக கொடுக்கப்பட்டால் நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்கிறோம் என்ற முடிவை அந்தக் கூட்டத்தில் எடுத்தார்களாம்.ஆனால் இதன் பிறகும் நிறைய பிரச்சினைகள் வந்ததாம். அப்போது நாகிரெட்டி ஜெயலலிதாவிடம் ‘என் படத்திற்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டிருக்கிறது’ என்ற தகவலை கூற,
இதையும் படிங்க: அரசியல் எண்ட்ரிக்காக விஜய் போடும் பக்கா திட்டம்!… ஆடியோ ரிலீஸில் நடக்குமா களேபரம்?
ஜெயலலிதா அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் உள்துறை செயலாளராக இருந்த மலைச்சாமி ஐ.ஏ.எஸ் மூலமாக இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வைத்திருக்கிறார் ஜெயலலிதா.அதன் பிறகே உழைப்பாளி திரைப்படம் வெளியானது என்றும் இதற்கு முதற் காரணமாக இருந்ததே நாகி ரெட்டிதான் என்றும் ஸ்ரீதர் கூறினார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…