ஷூட்டிங்கில் ரவிச்சந்திரன் செய்த அட்ராசிட்டி! பொறுத்துக் கொள்ள முடியாமல் பொங்கி எழுந்த ஜெயலலிதா

Published on: September 11, 2023
ravi
---Advertisement---

Actress Jayalalitha : திரையுலகில் ஒரு திறமையான நடிகராக வலம் வந்தார் நடிகர் ரவிச்சந்திரன். காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமான ரவிச்சந்திரனுக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் வந்ததா என்றால் இல்லை. வெள்ளிவிழா கண்ட படம் காதலிக்க நேரமில்லை. இருந்தாலும் அந்தப் படத்தை தொடர்ந்து இரண்டு வருடங்கள் ரவிச்சந்திரனுக்கு படவாய்ப்புகள் இல்லை.

அதற்கு காரணம் சித்ராலயாவில் அவருக்கு போடப்பட்ட இரண்டு வருட ஒப்பந்தம். ஒப்பந்தப்படி தன் நிறுவனத்தை தவிர வேறு எந்த நிறுவனத்திற்கும் அவர் நடிக்கக் கூடாது எனவும் அவருக்கு கிடைக்கிற சம்பளத்தில் ஒரு பகுதியை சித்ராலயாவிற்கு கொடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. அதனாலேயே பாதி நாள்கள் அவர் பஸ்ஸிலேயே பயணம் செய்ய வேண்யிருந்தது.

இதையும் படிங்க:பிச்சை எடுக்கிறாரு ரஹ்மான்!.. சரியான ஃபிராடு.. டிக்கெட்டுகளை கிழித்து அசிங்கமா திட்டும் ரசிகர்கள்!..

ஒரு வழியாக ஒப்பந்தம் முடிந்து தொடர்ந்து படங்களில் நடிக்க ஒரு வருடத்தில் 40 படங்களில் கமிட் ஆனார் ரவிச்சந்திரன். அந்தளவுக்கு ஒரு திறமைசாலியான நடிகராக மாறினார். அதே நேரம் பிரச்சினைக்குரிய நடிகர் என்ற பெயரையும் எடுத்தார். அதற்கு காரணம் அவர் தொடர்ந்து பல விபத்துக்களில் சிக்கி சரியான நேரத்திற்கு ஷூட்டிங்கும் வரமுடியாமல் போனதுதான்.

வலி ஒரு பக்கம், வாழ்க்கை ஒருபக்கம் என்று இருந்த ரவிச்சந்திரனுக்கு அவருடைய நண்பர்கள் அவரை மதுவுக்கு அடிமையாக்கினார்களாம். ஏனெனில் வலி இருப்பதால் ஷூட்டிங் போக முடியவில்லை. அதனால் மது சாப்பிட்டால் அந்த வலி அவருக்கு தெரிவதில்லை. அதனால் காலப் போக்கில் மதுப்பிரியராகவே மாறினாராம்.

இதையும் படிங்க: ஏற்பாடு செய்யத்தெரியாமல் ஏ.ஆர். ரஹ்மான் எல்லாம் எதுக்கு கச்சேரி நடத்துறாரு!.. மறக்கவே மறக்காது நெஞ்சம்!..

அப்படி ஒரு சமயம் ஜெயலலிதா ஜோடியாக நடிக்க இருந்த ஒரு படத்தின் படப்பிடிப்புக்கு மது சாப்பிட்டே வந்திருக்கிறார் ரவிச்சந்திரன். இதை ஒரு பத்திரிக்கையில் வன்மையாக கண்டித்து பேசினாராம் ஜெயலலிதா. மேலும் ‘ ரவிச்சந்திரன் ஒரு திறமையான நடிகர், நன்கு ஆடக்கூடியவர், நன்கு நடிக்கக் கூடியவர், சண்டைக் காட்சிகளிலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்.’

‘இப்படி இருக்கும் ரவிச்சந்திரன் எங்கேயோ போகக் கூடியவர். ஆனால் இப்படி மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறார்’ என பல விதங்களில் ரவிச்சந்திரனுக்கு அறிவுரைகளை வழங்கியிருக்கிறாராம். மேலும்ரவிச்சந்திரனும் ஜெயலலிதாவும் சேர்ந்து 7 படங்களில் ஜோடியாக நடித்திருக்கின்றனர். அவர்கள் நடித்த அந்த ஏழு படங்களுக்மே ப்ளாக் பஸ்டர் ஹிட். அதனாலேயே ரவிச்சந்திரன் மீது ஜெயலலிதாவுக்கு ஒரு தனி அக்கறையும் அன்பும் மரியாதையும் இருந்ததாம்.

இதையும் படிங்க: ஜெயிலர் சோலியை 4 நாளில் முடித்து விட்ட ஷாருக்கான்!.. குஷியில் விஜய் ரசிகர்கள்!.. ஜவான் வசூல் இதோ!

மேலும் இந்திய பட உலகின்  நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் போது பல கலைஞர்களின் பெயர்கள் இருந்ததாம். ஆனால் ரவிச்சந்திரன் மகன் அம்சவர்தன் பெயர் மட்டும் இல்லையாம். அதை குறிப்பிட்டு அம்சவர்தன் பெயரை அந்தப் பட்டியலில் சேர்க்க சொன்னாராம் ஜெயலலிதா. அந்தளவுக்கு ரவிச்சந்திரன்  மீது அலாதி அன்பு கொண்டவராக விளங்கினாராம் ஜெயலலிதா.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.