Murali: நடிகர் முரளி மாரடைப்பால் இறந்து போனதை போல அவர் தம்பி டேனியல் பாலாஜியும் இறந்தது சினிமா வட்டாரத்தினை அதிர்ச்சியாக்கி இருக்கிறது. இது ஒரு தொடர்கதையான விஷயமாக மாறி இருப்பதாக பிரபல விமர்சகர் காந்தராஜ் தெரிவித்து இருக்கிறார்.
முரளி உச்ச நட்சத்திரமாக இருக்கும் போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரின் சித்தி மகனான வில்லன் நடிகர் டேனியல் பாலாஜியும் சமீபத்தில் அதே போல மாரடைப்பில் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: கவுண்டமணியை ஒதுக்கிய ரஜினி, கமல்!.. கொஞ்சம் அசந்தா இமேஜை காலி பண்ணிடுவாரு!..
இதுகுறித்து பிரபல விமர்சகர் டாக்டர் காந்தராஜ் கூறுகையில், சினிமா இன்றைய காலத்தில் உதிர்ந்து விட்டது. முன்பெல்லாம் சின்ன ரோலில் நடித்த நடிகர்களை கூட ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது தியேட்டருக்கு வந்த சினிமா பார்க்கும் கூட்டம் குறைந்துவிட்டது.
இதனால் பலருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போகிறது. இதனால் பல நடிகர்கள் மன அழுத்தத்தில் தள்ளப்படுகின்றனர். வேட்டையாடு விளையாடுக்கு பிறகு அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. அது மன அழுத்தமாக இருந்து இருக்கலாம். அது அவருக்கு நெஞ்சுவலியை தந்து இருக்கலாம்.
இதையும் படிங்க: யார் சொல்லியும் கழுத்து செயினை கழட்டாத கவுண்டமணி!.. அதில் இருக்கும் ரகசியம் என்ன?..
முரளி குடும்பத்துக்கே அதிக வயது வாழக்கூடாத நோய் இருந்து இருக்கலாம். அது இதயநோயாக உயிரை எடுக்கலாம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குடும்பத்துக்குமே இதே பிரச்னை இருந்தது. அவர்கள் குடும்பத்திலும் யாருமே 60 வயதுக்கு அதிகமாக வாழவில்லை. அவர்கள் மட்டுமே 63 வயது வாழ்ந்தார்கள்.
இதே பிரச்னை தான் டேனியல் பாலாஜியின் உயிரிழப்புக்கும் காரணமாக இருக்கலாம். அவரின் கருவிழி தானம் நடந்தது சிறப்பான விஷயம். உடம்பில் என்ன பிரச்னை இருந்தாலும் கருவிழி ரத்த ஓட்டம் இல்லாததால் பாதிப்பு ஏற்படாது. இதையடுத்தே அவரின் கண் தானம் மிக சிறப்பான விஷயமாக பார்க்கப்படுவதாக தெரிவித்து இருக்கிறார்.
விஜய் டிவியில்…
SK_ Keerthi…
ஞானவேல் ராஜா…
Good bad…
கங்குவா திரைப்படத்தில்…