ஜெயலலிதாவோடு ஜோடியா நடிச்சு என்ன பிரயோஜனம்? விஜயகுமாருக்கு இப்படியெல்லாம் நடந்திருக்கா?

by Rohini |
jaya
X

jaya

Actress Jayalalitha: தமிழ் திரையுலகில் நடிகை ஜெயலலிதா எப்பேற்பட்ட ஒரு பெண் ஆளுமையாக இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். எம்ஜிஆர், சிவாஜி, ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் என அனைத்து முன்னனி நடிகர்களுடன் இணைந்து எண்ணற்ற பல நல்ல படங்களை கொடுத்திருக்கிறார். நன்கு ஆடவும் பாடவும் தெரிந்த குறிப்பிடத்தகுந்த நடிகைகளில் ஜெயலலிதாவும் ஒருவர்.

மேல் நாட்டு நாகரிகத்தை சினிமாவிற்குள் புகுத்தியவர்களில் ஜெயலலிதா முக்கிய பங்கு வகித்தார். அதுவரை சேலைகளிலும் தாவணிகளிலும் பார்த்த நடிகைகளில் ஜெயலலிதா சற்று வித்தியாசமாக ஸ்லீவ்லஸ் ஆடைகள், டைட்டான ஆடைகள் என கொஞ்சம் மாடர்ன் பெண்ணாக காணப்பட்டார்.

இதையும் படிங்க: இப்பதான் பணக்காரனா ஃபீல் பன்றேன்னு சொன்னதுக்கு பின்னால இவ்வளவு இருக்கா!.. அந்த சம்பவம்தான் காரணமாம்…

நடிகர்களில் எம்ஜிஆருடன் தான் ஜெயலலிதா அதிக படங்களில் நடித்திருக்கிறார். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய வரவேற்பையே பெற்றது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு போன்ற பிறமொழி படங்களிலும் ஜெயலலிதா நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் ஜெயலலிதாவுடன் விஜயகுமாருக்கு நடிக்க வாய்ப்பு வந்தும் அது சரிவர வெற்றியடையாமல் போனது கொஞ்சம் வருத்தத்தைத்தான் அளிக்கிறது. ஜெயலலிதாவும் விஜயகுமாரும் சேர்ந்து இரண்டு படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்களாம்.

மணிப்பூர் மாமியா, மாற்றான் தோட்டத்து மல்லிகை போன்ற படங்கள்தான் விஜயகுமாரும் ஜெயலலிதாவும் சேர்ந்து நடித்த படங்கள். ஆனால் அந்த இரு படங்களுமே திரைக்கு வரவில்லை என்பதுதான் கொடுமை.

இதையும் படிங்க: ஒருநாள் எல்லாரும் என்னை தேடி வருவாங்க!. அப்ப இருக்கு!.. சொன்னதை செய்து காட்டிய அஜித்!..

மணிப்பூர் மாமியார் படம் 9000 அடி வரை எடுத்து பாதியிலேயே நின்று விட்டதாம். வி. சி. குகநாதன் இயக்கிய இப்படத்தை ரகுராம், வி. சி. குகநாதன் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். ஆனால் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதே போல் மாற்றத்தான் தோட்டத்து மல்லிகை படமும் படமாக்கப்பட்டு அதுவும் திரையில் வரவில்லையாம். இவ்விரு படங்களுமே 80களுக்கு முன் தயாரான படங்களாம். அதன் பின் மாற்றான் தோட்டத்து மல்லிகை என்ற பெயரில் 1984 ஆம் ஆண்டு ராமராஜ் நடிப்பில் ஒரு படம் வெளியானது.

இதையும் படிங்க: சரத்குமாரோட லைஃப் ஸ்டைல் பத்தி யாருக்காவது தெரியுமா? சீக்ரெட்டை சொல்லி ஷாக் கொடுத்த விஷால்

ஜெயலலிதாவுடன் ஜோடியாக நடித்த இரண்டு படங்களுமே இப்படி வெளிவராமல் போனது அந்த நேரத்தில் விஜயகுமாருக்கு எப்பேற்பட்ட மனவேதனையை ஏற்படுத்தியிருக்கும்.

Next Story