
Cinema News
சரத்குமாரோட லைஃப் ஸ்டைல் பத்தி யாருக்காவது தெரியுமா? சீக்ரெட்டை சொல்லி ஷாக் கொடுத்த விஷால்
Actor Vishal: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு எந்தளவுக்கு ஒரு பெருமை இருக்கிறதோ அதே அளவு அந்தஸ்தை பெற்று ஒரு சுப்ரீம் ஸ்டாராக இன்று வரை வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சரத்குமார். ரஜினி, விஜயகாந்த், சத்யராஜை போல இவரும் ஆரம்பகாலங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து அதன் பின் கதாநாயகனாக உருவெடுத்தார்.
சூரியன் திரைப்படம் சரத்குமார் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. இந்தப் படத்தின் மூலம் தான் முதன் முதலில் ஹீரோவாக நடித்தார் சரத்குமார். படங்களில் போலீஸ் அதிகாரியாக தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நடிகராக சரத்குமார் விளங்கினார்.
இதையும் படிங்க: போட்டினு வந்துட்டா நண்பனாவது மண்ணாங்கட்டியாவது – கரிகாலனோடு நேரடியாக மோதும் வந்தியத்தேவன்
ஒரு காலத்தில் ரஜினி, கமலுக்கே டஃப் கொடுத்த நடிகராகவும் வலம் வந்தார். ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில் சரத்குமாரை பற்றி நடிகர் விஷால் சில சுவாரஸ்யங்களை பகிர்ந்தார்.
அதாவது சரத்குமாரை வைத்து விஷாலின் தந்தை ஐ லவ் இந்தியா, மகாபிரபு போன்ற படங்களை எடுத்தாராம். அப்பவே சரத்குமாரை வியந்து பார்த்திருக்கிறார்களாம் விஷாலும் அவரது அண்ணனும். ஒரு நடிகரை மிகவும் வியந்து பார்த்திருக்கிறோம் என்றால் அது சரத்குமார் மட்டும்தான் என விஷால் அந்த பேட்டியில் கூறினார்.
இதையும் படிங்க: ஃபிளாப்புக்காக மறுபடி ஒரு படம்!. ஆனா சரத்குமார் செஞ்ச வேலையில சின்னாபின்னமான விஷால் அப்பா!..
ஷாரூக்கான், சல்மான்கான் போன்றவர்களின் தற்போதைய வாழ்க்கை முறைகளை 90கள் காலத்திலேயே வாழ்ந்தவர் சரத்குமார் என விஷால் கூறினார். அதாவது நடிகர்களில் அப்பவே டொயாட்டா சேரா என்ற காரை வைத்தவர் இவர்தான் என்றும் ஃபியட் கார் மற்றும் சிலவகை பைக்குகளையும் வைத்திருந்தார் என்றும் கூறினார்.
அதுமட்டுமில்லாமல் தன்னிடம் இருந்த கார், பைக்குகளை நிற்க வைக்க இடம் காணாததால் அதற்கென்று தனியாக ஒரு கிரவுண்ட் நிலத்தை வாங்கி அங்கு எல்லா வகை கார்கள், பைக்குகளை நிறுத்தினார் என்றும் விஷால் கூறினார்.
இதையும் படிங்க: லியோவுக்கு 4 மணி ஷோ கண்டிப்பா கிடைக்கும்!.. அட.. அந்த பிரபலமே முழு நம்பிக்கையோடு சொல்றாரே!..
ஒரு மனுஷனை பார்க்கும் போது செமயா வாழ்கிறான் என்று சொல்வார்கள். அதை சரத்குமாரிடம் அப்பவே நாங்கள் பார்த்தோம் என்று விஷால் கூறினார். மேலும் எங்களுக்குள் எவ்ளவோ சர்ச்சைகள் இருந்திருக்கின்றன. ஆனால் அதை எல்லாவற்றையும் தாண்டி நான் பிரமித்து பார்த்த நடிகர் என்றால் அது சரத்குமார்தான் என்று விஷால் கூறினார்.