Connect with us

Cinema News

லியோவுக்கு 4 மணி ஷோ கண்டிப்பா கிடைக்கும்!.. அட.. அந்த பிரபலமே முழு நம்பிக்கையோடு சொல்றாரே!..

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு என இரு பெரிய படங்கள் ஒரே நாளில் மோதின.
அஜித்தின் துணிவு படத்துக்கு நள்ளிரவு 1:00 மணி காட்சி வழங்கப்பட்டது. விஜயின் வாரிசு படத்துக்கு அதிகாலை 4:00 மணி காட்சி வழங்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் வெளியான படங்களுக்கு அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

ரஜினிகாந்தின் ஜெயிலர் படமே காலை 9:00 மணிக்கு தான் முதல் காட்சி போடப்பட்டது. சிவகார்த்திகேயனின் மாவீரன், உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன், ஷாருக்கானின் ஜவான், கடந்த வாரம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் விஷாலின் மார்க் ஆண்டனி உள்ளிட்ட அனைத்து படங்களும் காலை 9:00 மணிக்குத்தான் முதல் ஷோ போடப்பட்டது.

இதையும் படிங்க: முதல் நாள் ரிசல்ட்டை தாங்க முடியாம புலம்பிய தயாரிப்பாளர்! என்.எஸ்.கே செய்த மேஜிக் – படமோ ஓஹோ வெற்றி!…

அடுத்த மாதம் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக உள்ள நடிகர் விஜயின் லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4:00 மணி காட்சி கிடைக்காது என்றும் காலை 9:00 மணிக்கு தான் முதல் ஷோவை போடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

துணிவு படத்துக்கு சிறப்பு காட்சி போடப்பட்ட நிலையில், ரோகினி தியேட்டரின் கண்ணாடியை ரசிகர்கள் உடைத்து துவம்சம் செய்ததுதான் இந்தப் பிரச்சனைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:  அந்த ஆளை நம்பி எல்லாமே நாசமா போச்சு!.. இனிமே வீட்டுல சும்மா பூஜை போட வேண்டியது தான்.. புலம்பும் நடிகை!..

மேலும், காலையில் பால் வண்டிகளில் இருந்து பாலை திருடி ரசிகர்கள் கட்டவுட்டுக்கு அபிஷேகம் செய்த விவகாரங்களும் அதிகாலை காட்சியை ரத்து செய்ய காரணமாக அமைந்து விட்டது. இந்நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரோகினி தியேட்டர் ஓனர் ரேவந்த், கண்டிப்பாக விஜயின் லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி போடுவதற்கான அனுமதியை அரசு வழங்கும் என நம்புகிறோம் என்றார்.

வாரிசு படத்தின் டிரைலர் செலிப்ரேஷனுக்கு சுமார் 8,000 ரசிகர்கள் தியேட்டருக்கு முன் கூடிவிட்டனர். FDFS செலிப்ரேஷன் என்றாலே ரோகினி தான் ஏதாவது ரசிகர்கள் கருதி வரும் நிலையில், அரசு மற்றும் காவல்துறை அனுமதி அளித்தால் அதிகாலை சிறப்பு காட்சிக்கான சரியான ஏற்பாடுகளை செய்யத் தயாராக இருப்பதாகவும் ரேவந்த் தனது பெட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நான் கூப்பிட்டு வரல!.. அம்பானி கூப்பிட்ட உடனே போறியா!.. நயன்தாரா மீது செம கடுப்பில் ஷாருக்கான்!..

விஜயின் லியோ படத்தின் கிளைமாக்ஸ் மட்டும் ஆசையாக 20 நிமிஷம் இருக்கும் என தெரிய வந்திருக்கிறது. கண்டிப்பாக ரசிகர்கள் அந்தக் காட்சியின் போது என்ன அலப்பறையை தியேட்டரில் செய்யப் போகின்ற என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. நிச்சயம் லியோ திரைப்படம் ரசிகர்களுக்கு சமற்ற ஆகம அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்று கூறினார்.

தளபதி படத்தை நானே முதல் நாள் தொடர்ந்து நான்கு ஷோ பார்த்து விடுவேன் விஜய் ரசிகர்களை சொல்லவா வேண்டும் கண்டிப்பா ஒரு வாரத்துக்கு தியேட்டர் ஹவுஸ்ஃபுல் ஆகிவிடும் கூட்டத்தையும் சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் எங்கள் டீம் செய்து வருகிறது என்றார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top