நான் கூப்பிட்டு வரல!.. அம்பானி கூப்பிட்ட உடனே போறியா!.. நயன்தாரா மீது செம கடுப்பில் ஷாருக்கான்!..
அம்பானி வீட்டின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு நடிகை நயன்தாரா கலந்து கொண்ட நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கடுப்பாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகை நயன்தாரா அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் ஷாருக் கானுக்கு ஜோடியாக அறிமுகமாகி இருந்தார். லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா தனது பாலிவுட் என்ட்ரி மூலம் பேன் இந்தியா லேடி சூப்பர் ஸ்டார் ஆகவே மாறியுள்ளார்.
இதையும் படிங்க: அப்படியொரு உருட்டு.. இப்படியொரு உருட்டு!.. இது எந்த படத்தோட காப்பின்னு தெரியலையே.. லியோ புது போஸ்டர்!..
பாலிவுட்டில் முதல் படமே ஷாருக் கான் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையிலும், புரமோஷனுக்கு செல்ல மாட்டேன் எனும் தனது கொள்கையில் இருந்து நயன்தாரா மாறவே இல்லை.
ஜவான் படத்தின் புரமோஷனுக்கு மட்டுமின்றி, சமீபத்தில் ஷாருக்கான் நடத்திய வெற்றி கொண்டாட்டத்திலும் நயன்தாரா பங்கேற்கவில்லை. இயக்குனர் அட்லி, தீபிகா படுகோன் உள்ளிட்ட படக்குழுவினர் தான் பங்கேற்றனர்.
ஆனால், கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா அம்பானி வீட்டில் நடந்த கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: பாலாவுக்கே இப்படினா அதுல நடிக்கிறவங்க நிலைமை?!… தயாரிப்பாளர் தலைல துண்டு விழாம இருந்தா சரிதான்…
ஷாருக்கானின் ஜவான் சக்சஸ் பார்ட்டியை புறக்கணித்த நடிகை நயன்தாரா அம்பானி வீட்டு விசேஷத்திற்கு மட்டும் சென்ற நிலையில் ஷாருக் கான் சற்றே கடுப்பாகி உள்ளார் என்கிற பேச்சுக்கள் பாலிவுட்டில் தற்போது அடிபட்டு வருகின்றன.
நயன்தாரா அடுத்து பிளாக்ஷீப் ட்யூட் விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடிக்க உள்ளார். மேலும், பாலிவுட்டில் பெரிய நடிகர்களுடன் கூட்டணி வைப்பதற்காகவே தொடர்ந்து இது போன்ற விழாக்களில் அவர் பங்கேற்று வருவதாக கூறப்படுகிறது.
வீடியோவை காண இந்த லிங்க்கை க்ளிக் செய்யுங்க..
https://www.instagram.com/reel/CxZIye8S_y5/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==