அப்படியொரு உருட்டு.. இப்படியொரு உருட்டு!.. இது எந்த படத்தோட காப்பின்னு தெரியலையே.. லியோ புது போஸ்டர்!..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் புதிய போஸ்டர் அப்டேட் ஆக இன்று வெளியானது. லியோ படத்திலிருந்து செகண்ட் சிங்கிள் அப்டேட் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தொடர்ந்து செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அல்வா கொடுக்கும் விதமாக தினமும் புதிய புதிய போஸ்டர்களை மட்டுமே வெளியிட்டு வருகிறது.
விஜய் ரசிகர்களை பார்த்தால் என்ன அந்த அளவுக்கு இளிச்சவாயனா தெரியுதா என அஜித் ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கமல் மகளுக்கே இப்படியொரு நிலைமையா!.. பப்ளிக்கில் ஸ்ருதிஹாசனிடம் அத்துமீறிய ரசிகர்.. என்ன ஆச்சு?
இந்த நிலையில், புதிதாக லியோ படக்குழுவினர் வெளியிட்டுள்ள போஸ்டரை பார்த்து ரசிகர்கள் இவங்களே சண்டையை தவிர்ப்பார் என்று சொல்லுவாங்களா, அப்புறம் இவங்களே சண்டைக்கு தயார்ன்னு சொல்லுவாங்களாம் என பங்கம் பண்ணி வருகின்றனர்.
முன்னதாக வெளியான லியோ படத்தின் போஸ்டரில், KEEP CALM AND AVOID THE BATTLE என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது KEEP CALM AND PREPARE FOR BATTLE என குறிப்பிட்டுள்ளார்களே என கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சைலண்டா இருந்து அடிப்பேன்!.. மிரட்டலாக வெளிவந்த லியோ போஸ்டர்… இனி சரவெடிதான்…
மேலும், தீ தளபதியாக தெறிக்கும் விஜயின் இந்த புதிய போஸ்டர் எந்த ஹாலிவுட் படத்தில் இருந்து சுட்டார்கள் என தெரியவில்லையே என நெட்டிசன்கள் கூகுளில் தேட ஆரம்பித்து விட்டனர். எப்படியும் லியோ படத்துக்கு போஸ்டரை எடிட் செய்பவர் சொந்தமாக டிசைன் செய்திருக்க மாட்டார் என்றே நெட்டிசன்கள் மற்றும் விஜய் ஹேட்டர்கள் பதிவுகளை பரப்பி வருகின்றனர்.
போஸ்டர்கள் ஒவ்வொன்றும் கொடுக்கும் விசுவல் எல்லாம் தெறியாக இருக்கு என்றும் எவன் என்ன சொன்னாலும் இந்த முறை லியோ படைக்கப் போகும் பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட் வெறித்தனமாக இருக்கும் என்றும் ரியல் ரெக்கார்டு மேக்கர் யார் என்பதை அக்டோபர் 19ம் தேதி முதல் பார்ப்பீங்க என விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.