போட்டினு வந்துட்டா நண்பனாவது மண்ணாங்கட்டியாவது - கரிகாலனோடு நேரடியாக மோதும் வந்தியத்தேவன்

Vikram vs Karthi: தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இவர்களுக்கு அடுத்து களத்தில் நிற்கும் நடிகர்கள் சூர்யா, விக்ரம், கார்த்தி, சிவகார்த்திகேயன். இவர்கள் அனைவரும் அடுத்தடுத்து கைவசம் படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். கார்த்தி தொடர்ந்து புதுமுக இயக்குனர்களின் படங்களில் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டு வருகிறார்.

விக்ரம் தங்கலான் படத்தில் நடித்து முடித்து விட்டு ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து சமீபத்தில் தான் அதற்கான டப்பிங்கையும் முடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: ஃபிளாப்புக்காக மறுபடி ஒரு படம்!. ஆனா சரத்குமார் செஞ்ச வேலையில சின்னாபின்னமான விஷால் அப்பா!..

4 வருடத்திற்கு முன்பாகவே ஆரம்பிக்கப்பட்ட துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் எல்லாம் முடிந்து விட்டதாம். விக்ரமும் டப்பிங் வேலைகளை நிறைவு செய்து விட்டார். அதுமட்டுமில்லாமல் படத்தை பார்த்த விக்ரமுக்கு படம் மிகவும் பிடித்து விட்டதாம்.

அதோடு துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் திட்டத்தில் விக்ரம் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிகிறதாம். இப்படி அடுத்தடுத்து துருவ நட்சத்திரம் படத்தின் அப்டேட்கள் வர வர படம் இந்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸ் என செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.

இதையும் படிங்க: லியோவுக்கு 4 மணி ஷோ கண்டிப்பா கிடைக்கும்!.. அட.. அந்த பிரபலமே முழு நம்பிக்கையோடு சொல்றாரே!..

4 வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட துருவ நட்சத்திரம் திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்களும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்க இந்தப் படத்தோடு கார்த்தியின் ‘ஜப்பான்’ படமும் நேருக்கு நேராக மோத தயார் நிலையில் இருக்கின்றதாம்.

ஜப்பான் படம் மட்டுமில்லாமல் ஜிகர்தண்டா 2 படமும் தீபாவளி ரிலீஸ் அன்றுதான் திட்டமிட்டிருக்கிறார்களாம். ஆக இந்த வருட தீபாவளி ரிலீஸாக துருவ நட்சத்திரம், ஜப்பான், ஜிகர்தண்டா 2 ஆகிய மூன்று படங்கள் ஒரே நேரத்தில் மோதுவதாக தெரிகிறது.

இதையும் படிங்க: அந்த ஆளை நம்பி எல்லாமே நாசமா போச்சு!.. இனிமே வீட்டுல சும்மா பூஜை போட வேண்டியது தான்.. புலம்பும் நடிகை!..

மூன்று படங்களின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கின்றது. குறிப்பாக ஜிகர்தண்டா 2 வில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பையும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே மார்க் ஆண்டனி படத்தால் எஸ்.ஜே.சூர்யாவின் மார்கெட் உயர்ந்துள்ளதால் இனி வரும் எஸ்.ஜே. சூர்யா நடித்த படங்களின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும்.

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it