ஃபிளாப்புக்காக மறுபடி ஒரு படம்!. ஆனா சரத்குமார் செஞ்ச வேலையில சின்னாபின்னமான விஷால் அப்பா!..

by சிவா |
sarathkumar
X

90களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் சரத்குமார். வினியோகஸ்தர், தயாரிப்பாளர் என சினிமாவில் இறங்கி அதில் நஷ்டமடைந்து சினிமாவில் நடிக்க துவங்கியவர். துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். புலன் விசாரணை படத்தில் விஜயகாந்த் இவரை வில்லனாக நடிக்க வைத்தார்.

அதன்பின் தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்தார். அதே விஜயகாந்த சரத்குமாரை சொந்த தயாரிப்பில் ஹீரோவாக மாற்றினார். அதன்பின் தொடந்து பல படங்களிலும் நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறினார். கட்டுமஸ்தான உடலமைப்பை வைத்திருந்தது அவருக்கு பெரிய பிளஸ்ஸாக இருந்தது.

இதையும் படிங்க: லியோவுக்கு 4 மணி ஷோ கண்டிப்பா கிடைக்கும்!.. அட.. அந்த பிரபலமே முழு நம்பிக்கையோடு சொல்றாரே!..

சூரியன், சூரிய வம்சம், சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக என சூப்பர் ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்தார். சரத்குமாரை தூக்கிவிட்டவர் விஜயகாந்த் என்றால் அவரை வளர்த்துவிட்டவர் கே.எஸ்.ரவிக்குமார். சரத்குமாரை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார்.

90களில் தொடந்து பிஸியாக நடித்து வந்தவர் சரத்குமார். விஷாலின் அப்பா ஜி.கே.ரெட்டி சரத்குமாரை வைத்து தயாரித்த திரைப்படம் ஐ லவ் இந்தியா. 1993ல் வெளிவந்த இந்த படம் படுதோல்வி அடைந்தது. காஷ்மீருக்கெல்லாம் சென்று அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் இது.

இதையும் படிங்க: அந்த ஆளை நம்பி எல்லாமே நாசமா போச்சு!.. இனிமே வீட்டுல சும்மா பூஜை போட வேண்டியது தான்.. புலம்பும் நடிகை!..

எனவே, இந்த நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக மீண்டும் அதே தயாரிப்பாளருக்கு ஒரு படம் நடித்து கொடுக்கிறேன் என சரத்குமார் வாக்குறுதி கொடுத்தார். அபப்டி உருவான திரைப்படம்தான் மகா பிரபு. இப்படத்திற்காக சென்னையில் இருக்கும் ஒரு ஸ்டுடியோவில் ஒரு செட் போடப்பட்டது. ஆனால், தொடர்ந்து நடித்து வந்த சரத்குமாரால் இப்படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. நேரம் கிடைக்கும் மட்டும் நடித்து கொடுத்தார்.

இதனால் அந்த ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட செட் ஒன்றரை வருடம் அப்படியே இருந்ததாம். தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவுக்காக ஒரு செட் இவ்வளவு காலம் கலைக்காமல் இருந்தது இந்த படத்திற்குதான். நஷ்டத்திற்காக மீண்டும் நடிக்க ஒத்துகொண்டு ஆனாலும் அதிலும் சரியாக நடிக்காமல் விஷாலின் அப்பாவுக்கு பெரிய லாபம் கிடைக்கவில்லை. அப்படி வெளியான மகாபிரபு திரைப்படம் சுமாராகவே ஓடியது.

இதையும் படிங்க: கோடி கோடியா கல்லா கட்றாங்கப்பா!.. ரிலீசுக்கு முன்பே கோடிகளை குவித்த தனுஷ் 50!..

Next Story