ஐஸ்வர்யா விவகாரத்தில் தவித்த ரஜினிகாந்த்… ஈகோ இல்லாமல் உதவிக்கு வந்த ஜெயலலிதா!...

Rajinikanth: ரஜினிகாந்த் தன்னுடைய கேரியரில் மிக உயரத்தினை எட்டி இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் தொடர்ச்சியாக பிரச்னைகளை மட்டுமே சந்தித்து வருகிறார். அப்படி இதற்கு முன்னரே ஒருமுறை ஐஸ்வர்யா பிரச்னைக்கு முதல்வர் ஜெயலலிதா உதவிய கதை தான் தற்போது வெளியாகி இருக்கிறது.

அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் நடிப்புக்கு வந்தவர் ரஜினிகாந்த். வில்லனாக தொடங்கி ஹீரோவாக ஹிட்டடித்தார். பல போராட்டங்களுக்கு பின்னர் தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்த்தினை பெற்றார். கிட்டத்தட்ட கோலிவுட்டின் அடையாளமாகி இருக்கிறார்.

இதையும் படிங்க: அந்த படம் ஓடலன்னா கன்னியாஸ்திரி ஆகி இருப்பேன்.. விஜயகாந்த் பட நடிகை சொன்ன பகீர் தகவல்…

இது ஒரு புறம் இருக்க அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்னை தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது. இளம் வயதில் தொடங்கி கல்யாணம் வரை கிசுகிசுக்கள் ஏராளம். இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். ஐஸ்வர்யாவை தனுஷுக்கு திருமணம் செய்து வைத்தார்.

செளந்தர்யா தொழிலதிபர் ஒருவரை மணந்து கொண்டார். ஆனால் இருவருக்குக்கும் மனகசப்பு ஏற்பட சில வருடங்களில் விவகாரத்து பெற்றனர். இதை தொடர்ந்து அவருக்கும், விசாகன் என்பவருக்கும் மறுமணம் செய்து வைத்தார். இதையடுத்து, இரண்டு வருடத்துக்கு பின்னர் ஐஸ்வர்யாவும் தனுஷை பிரிவதாக அறிவித்தார்.

சட்டரீதியாக இன்னும் போகவில்லையே சமாதானம் செய்து விடலாம் என ரஜினி தரப்பு தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தியும் எதுவும் வேலைக்கே ஆகவில்லை. சமீபத்தில் நீதிமன்றத்தில் முறையாக விவகாரத்து கோரி மனு செய்து இருந்தனர். இதுகுறித்து பிரபல விமர்சகர் அந்தணன் சில விஷயங்களை தெரிவித்து இருக்கிறார்.அப்பேட்டியில் இருந்து, இப்போது ஐஸ்வர்யா, தனுஷ் பிரச்னையில் ரஜினிகாந்த் குழப்பமாக தான் இருக்கிறார்.

இதையும் படிங்க: ஒரு பக்கம் கல்யாணம்… இன்னொரு பக்கம் கர்ப்பம்… கடுப்பாகி போன பாக்கியலட்சுமி ரசிகர்கள்!..

முன்பெல்லாம் இப்படி ஒரு பிரச்னை வரும் போது நேராக தன்னுடைய குருநாதர் பாலசந்தரை நேரில் போய் சந்தித்து. தன்னுடைய பிரச்னையை கூறி ஆறுதல் தேடிக் கொள்வார். அப்படி ஒருமுறை ஐஸ்வர்யாவால் பிரச்னை வந்த போது, பாலசந்தரிடம் போய் நின்றாராம். அவரோ நேராக முதல்வருக்கு கால் செய்து பிரச்னையை சொல் என அறிவுரை கூறி இருக்கிறார். நான் எப்படி என ரஜினிகாந்த் தயங்கினார்.

ஏனெனில் அப்போ ரஜினிகாந்துக்கும், ஜெயலலிதாவுக்கும் மறைமுக மோதல் இருந்தது. இருந்தும் குருநாதர் சொல்லிவிட்டாரே என்ற எண்ணத்தில் ஜெயலலிதாவுக்கு கால் செய்து தன்னுடைய பிரச்னையை சொல்லிவிட்டாராம் ரஜினிகாந்த். பொறுமையாக கேட்ட ஜெயலலிதா எதுவும் நினைக்காமல் அவர் பிரச்னையை தீர்த்து வைத்தார் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: ஆஸ்கார் விருதுக்கு வந்த ஆபத்து.. 15 வருஷம் கழிச்சு ரஹ்மான் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டா

 

Related Articles

Next Story