எம்.ஜி.ஆருக்கு ஜோடி!.. ரொமான்ஸ் சீனில் சொதப்பிய ஜெயலலிதா!.. அந்த நடிகை மாதிரி வருமா?...

by சிவா |
jayalalitha
X

எம்.ஜி.ஆருடன் அதிகமாக ஜோடி போட்டு நடித்து இரண்டு நடிகைகள்தான். ஒருவர் சரோஜாதேவி. மற்றொருவர் ஜெயலலிதா. இவர்கள் இருவரையும் மாறி மாறி தனது படங்களில் நடிக்க வைத்தார் எம்.ஜி.ஆர். அவர் நினைத்தது போலவே இவர்கள் இருவரும் எம்.ஜி.ஆருக்கு பொருத்தமான ஜோடியாக இருந்தனர்.

எம்.ஜி.ஆரின் ரசிகர்களும் இதை விரும்பினார்கள். அம்மா நடிகை என்பதால் குடும்ப சூழ்நிலை காரணமாக சினிமாவில் நடிக்க வந்தார் ஜெயலலிதா. அதாவது விருப்பமே இல்லாமல்தான் அவர் சினிமாவுக்கு வந்தார். அதற்காக அவர் எந்த பயிற்சியும் எடுக்கவில்லை. ஜெயலலிதாவை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குனர் ஸ்ரீதர்.

இதையும் படிங்க: எழுதிக் கொடுத்த எம்.ஜி.ஆர்!.. நெகிழ்ந்து போய் பேசமுடியாமல் நின்ற ஸ்ரீதர்!.. உரிமைக்குரல் உருவானது இப்படித்தான்!..

அவரின் இயக்கத்தில் ஜெயலலிதா அறிமுகமான திரைப்படம் ‘வெண்ணிற ஆடை’. அடுத்த படமே எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ‘ ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததுதான் ஜெயலலிதாவுக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அதன்பின் தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் நடித்தார்.

ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கும் இவருக்கும் இடைஇயே மறைமுக உரசல் வர எம்.ஜி.ஆருடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, கோபத்தில் சிவாஜி, ஜெய் சங்கர் உள்ளிட்ட மற்ற நடிகர்களுடன் நடிக்க துவங்கினார். அதன்பின் அரசியல் கட்சியில் அவரை எம்.ஜி.ஆர் சேர்த்துவிட அதன்பின் அரசியலில் பெரும் ஆளுமையாக மாறினார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் தொட்டதெல்லாம் துலங்கியதற்கு அந்த ஒரு குணம்தான் முக்கிய காரணம்! பிரபலம் சொல்லும் ‘வாவ்’ தகவல்

ஆயிரத்தில் ஒருவன் படம் ஜெயலலிதாவுக்கு 2வது திரைப்படம். எம்.ஜி.ஆருடன் முதல் படம். இந்த படத்தில் எம்.ஜி.ஆருடன் முதலிரவு கொண்டாடுவது போல ஒரு காட்சி. அப்போது ‘நாணமோ.. இன்னும் நாணமோ’ என்கிற பாடல் வரும். அந்த பாடல் காட்சியில் ஜெ.வின் முகத்தில் காதல் உணர்வே வரவில்லை. பயம், தயக்கம், பதட்டம், கான்வெண்ட் படிப்பு எல்லாம் சேர்ந்து அவரால் சரியாக நடிக்க முடியவில்லை. அவரின் நடிப்பில் எம்.ஜி.ஆர் மற்றும் அப்பட இயக்குனர் பந்துலுவுக்கும் திருப்தி இல்லை.

mgr and jayalalitha

mgr and jayalalitha

அப்போது அங்கு வந்த சின்னப்ப தேவர் ‘ஏம்மா பயப்படுற?.. சரோஜா தேவி எம்.ஜி.ஆரை விரட்டி விரட்டி காதலிப்பது போல நடிக்கணும்’ என சொல்லி சில ஐடியாக்களை சொன்னார். அதன்பின் ஒருவழியாக அந்த பாடலில் நடித்து முடித்தார் ஜெயலலிதா. அதன்பின் பல படங்களிலும் எம்.ஜி.ஆருடன் காதல் காட்சிகளில் அசத்தலாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

Next Story