அடுத்த எம்.ஜி.ஆர் இவர்தான்!.. ஜெயலலிதா சொன்ன அந்த நடிகர்!.. நடந்தது இதுதான்!…

0
224
MGR and Jayalalithaa
MGR and Jayalalithaa

60களில் தமிழ் சினிமாவில் முக்கிய ஆளுமையாக இருந்தவர் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். சிறு வயது முதலே நாடகங்களில் நடித்து பின் சினிமாவுக்கு வந்தார். 10 வருடங்கள் சின்ன சின்ன வேடங்களில் நடித்துவிட்டு தனது 47வது வயதில் ராஜகுமாரி திரைப்படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக நடிக்க துவங்கினார்.

இவர் நடிப்பில் வெளிவந்த நாடோடி மன்னன் உள்ளிட்ட படங்கள் நல்ல வசூலை பெறவே முன்னணி நடிகராக மாறினார். எம்.ஜி.ஆர் படம் என்றாலே பாடல்களும், சண்டை காட்சிகளும் நன்றாக இருக்கும் என நம்பியே ரசிகர்கள் தியேட்டருக்கு போனார்கள். அப்படிப்போன ரசிகர்களை எம்.ஜி.ஆரின் படங்கள் ஏமாற்றவில்லை.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் கொடுத்த முத்தம்!.. 2 நாட்கள் முகத்தை கழுவாமல் இருந்த நடிகை… அட அவரா?!..

எந்த நடிகரையும் பின்பற்றாமல் தனக்கென ஒரு தனி பாணியையும், ஸ்டைலையும் உருவாக்கினார் எம்.ஜி.ஆர். கலர் கலராக உடை, உடல் மொழி, நடனத்திற்கு தனி ஸ்டைல் என யாரும் செய்யாததை செய்தார் எம்.ஜி.ஆர். எனவே, எம்.ஜி.ஆர் ஸ்டைல் என ஒன்று உருவானது. எனவே, அவரின் ரசிகர்களும் அவரை போலவே உடையணிந்து நடன நிகழ்ச்சிகளில் நடனம் ஆடினார்கள். இப்போது வரை அது தொடர்கிறது.

எம்.ஜி.ஆருக்கு எதிராக தனது மகன் மு.க.முத்துவை களமிறக்கினார் கலைஞர் கருணாநிதி. அப்படி உருவான படம்தான் பிள்ளையோ பிள்ளை. 1972ம் வருடம் இப்படம் வெளியானது. இந்த படத்தை பார்த்த எம்.ஜி.ஆர் கருணாநிதி நம்மை கட்டம் கட்டுகிறார் என்பதை புரிந்துகொண்டார். அந்த விழாவில் பேசிய மு.க.முத்து எம்.ஜி.ஆர் என் ஆசான் என பேசினார்.

mgr

அவருக்கு பின் பேசிய எம்.ஜி.ஆர் ‘தம்பி முக முத்து என்னை அவரின் ஆசான் என சொன்னார். நான் சினிமாவில் வரும்போது யாரையும் பின்பற்றவில்லை. தியாகராஜ பகவாதரை போல டி.எம்.எஸ் பாடவில்லை. எனவே, முக முத்துவும் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி கொள்ள வேண்டும்’ என பேசினார்.

நடிகை ஜெயலலிதா இந்த படத்தை பார்த்துவிட்டு ‘ஜெய்சங்கர், ரவிச்சந்திரனுக்கு வராத எம்.ஜி.ஆர் ஃபார்முலா முக முத்துக்கு செட் ஆகியிருக்கு என பேசியதாக அப்போது ஒரு செய்தி உண்டு. பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு உள்ளிட்ட சில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போனார் மு.க.முத்து.

google news