டம்மியாக்கணும்னு நினைச்சி பல்பு வாங்கிய நடிகை... ஜெயலலிதாகிட்ட வாலாட்டினா நடக்குமா?

by sankaran v |   ( Updated:2025-03-26 02:28:09  )
jayalalitha
X

#image_title

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசியலுக்கு வந்த பிறகு கோபப்படல. அந்தப் பழக்கம் அவங்க நடிகையாக இருந்தபோதே இருந்துருக்கு. அதுபற்றி பார்க்கலாம்.

என்.டி.ராமாராவும், ஜெயலலிதாவும் ஜோடியாக நடித்த தெலுங்கு திரைப்படம் ஸ்ரீகிருஷ்ண விஜயம். அந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் முன்னாள் கதாநாயகி ஜமுனா. இந்தப் படத்தில் ஒரு சில காட்சிகள்தான் உங்களுக்கு வரும் என்று ஜமுனாவிடம் சொல்லி என்டி.ராமராவ் தான் ஒப்பந்தம் செய்தாராம்.

முதல்நாளில் ஜெயலலிதா ஜமுனாவைப் பார்த்து வணக்கம் சொன்னார். அதற்கு ஜமுனா வணக்கம் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாராம். 2 நாள்கள் கழித்து ராமாராவிடம் புதிய பிரச்சனையைக் கிளப்பினார் ஜமுனா. இந்தப் படத்தில் நான்தான் சீனியர் நடிகை. என் பேருதான் முதலில் வரணும். அப்புறம் தான் ஜெயலலிதா பேரு வரணும் என்றார்.

jamuna

#image_title

அதை அப்போதே என்டி.ராமாராவ் மறுத்துவிட்டார். இந்தப் படத்தில் ஜெயலலிதா தான் கதாநாயகி. அதனால் அவரது பெயர்தான் முதலில் வரும் என்று தீர்மானமாக சொல்லி விட்டாராம். இதனால் ஜமுனாவுக்குக் கோபம் அதிகமானது. மறுநாள் முக்கியமான காட்சி. அதில் ஜெயலலிதா தனது வசனத்தைப் பேசுகிறார். அதைப் பார்த்த ஜமுனா, ஏ பொண்ணே, ஏன் இந்த அளவு கத்திப் பேசுற? வாய்ஸைக் கொஞ்சம் குறைச்சிக்கன்னு சொன்னாராம்.

அதைக் கேட்டுக்கிட்டு சும்மா விடுவாரா ஜெயலலிதா? ஜமுனாவிடம் இப்படி சொல்கிறார். இங்கே மைக் மேல இருக்கு. நான் சத்தம் போட்டுப் பேசினாதான் கேட்கும். உன்னால முடிஞ்சா சத்தம் போட்டுப் பேசு. இல்லன்னா உன் இஷ்டம்னு கோபத்தில் கத்தியிருக்கிறார் ஜெயலலிதா. ‘சில படப்பிடிப்புகளில் எனக்கு கோபம் வந்திருக்கு. ஆனால், அன்னைக்கு மாதிரி என்னைக்குமே கோபம் வந்ததில்லைன்னு பத்திரிகை பேட்டி ஒன்றில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்’ என பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.

Next Story