நேரா கோர்ட்டுக்குதான் வருவேன்!.. வந்தா என்னை கடத்திடுவாங்க!.. ஜெயம் ரவி உயிருக்கு ஆபத்தா?..

by sankaran v |   ( Updated:2024-09-12 21:19:43  )
JR24
X

JR24

ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்து விவகாரம் சமீபத்தில் வலைதளங்களில் பேசுபொருளாக இருந்து வருகிறது. இது ஆர்த்தி விஷயத்தில் எனக்கு தெரியவே தெரியாது. என்னிடம் எதுவும் கலந்து ஆலோசிக்கவே இல்லை. திடீர்னு இப்படி ஒரு அறிக்கையைக் கொடுத்துவிட்டார்.

என் பிள்ளைகளை யார் கவனிப்பதுன்னு சொல்றாங்க. அதுவும் சரிதான் என்று பார்த்தால் ஜெயம் ரவியின் பக்கம் என்ன நியாயம் உள்ளது என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது. நடந்தது இதுதான் என்கிறார்கள் அவருக்கு நெருங்கியவர்கள். என்ன சொல்றாங்கன்னு பார்ப்போமா...

ஜெயம் ரவி கடந்த 3 மாதகாலமாக சென்னையில் இல்லை. இதற்குக் காரணம் ஜெயம் ரவியின் மாமனார் சுஜாதாவின் அடக்குமுறை, சர்வாதிகாரம், குடும்பப்போக்கு இதுதான் காரணம்னு ரவி தரப்புல சொல்றாங்க. அவங்க பெரிய கூட்டுக்குடும்பம்.

அப்பா, அண்ணன், இவரு எல்லாரும் ஒண்ணா தான் வளர்ந்தாங்க. எடிட்டர் மோகன் வந்து டணால் தங்கவேலுவின் வளர்ப்புப் பிள்ளை மாதிரி வளர்ந்தவர்தான். அதிர்ந்து பேச மாட்டாரு. அப்படித்தான் அவரு பிள்ளைகளும். டைவர்ஸ் நோட்டீஸ் ரெண்டு தடவை மறுக்கப்பட்டு 3வது தடவை தான் வாங்கப்பட்டு இருக்கு.

2 தடவை 'வாங்க வேண்டாம்'னு சொன்னது குஷ்பூ தானாம். இவர் சுஜாதாவுக்கு நெருங்கிய தோழி. ஜெயம் ரவி அவரது மனைவி வீட்டாரை சந்திக்கவே விரும்பலையாம். கோர்ட் தன்னை விசாரிக்க அழைக்கும்போது சென்னை வருவேன். அதற்கு முன் யாருடைய பேச்சைக் கேட்டுக் கொண்டும் நான் வர மாட்டேன்.

JRA

JRA

அங்கு வந்தால் நான் கடத்தப்படுவேன். அப்படி நடந்தால் நான் என்னாவேன் என்று எனக்குத் தெரியாது. அதை நான் விரும்பவில்லை. மற்றபடி நான் மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. எனக்கு அந்தளவு மன உளைச்சலைக் கொடுத்து இருக்கிறார்கள் என்றாராம் ஜெயம் ரவி.

Also read: அவங்களுக்கு மட்டும் தனி சட்டமா?… சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ்!

ஜெயம் ரவி பிரதர் படம் வருது. அதுக்குப் புரொமோஷன் வேலைகள் இருக்கு. அதுல கலந்துக்கிட்டாருன்னா கூட்டமும் கூடும். பரபரப்பு வரும். படத்துக்கு நல்ல விளம்பரம் வரும். இது ஊடகங்கள், பத்திரிகைகளின் தனி கவனம் இருக்கும். அது அந்தப் படத்துக்கு பிளஸ் பாயிண்ட் தான். அதனால தான் ஜெயம் ரவி இப்படிப் பதில் தெரிவித்துள்ளாராம்.

இது குறித்து மேலும் தகவல்களுக்கு வீடியோவைக் காண... இந்த லிங்கை சொடுக்குங்கள்

Next Story