கமல்ஹாசன் படத்தில் ஜெயம் ரவியா?? என்னப்பா சொல்றீங்க.. செம மேட்டரா இருக்கே!!

by Arun Prasad |
கமல்ஹாசன் படத்தில் ஜெயம் ரவியா?? என்னப்பா சொல்றீங்க.. செம மேட்டரா இருக்கே!!
X

“ஜெயம்” என்ற தனது முதல் திரைப்படத்திலேயே ஃபேமிலி ஆடியன்ஸை தன் பக்கம் இழுத்துக்கொண்டவர் ஜெயம் ரவி. அதன் பின் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளிவருகிறது.

தனது சிறுவயதிலேயே தெலுங்கு திரைப்படங்களில் நடித்த ஜெயம் ரவி, அதன் பின் தனது கல்லூரி காலங்களில் அண்ணன் மோகன் ராஜாவை வைத்து ஒரு குறும்படத்தையும் இயக்கியுள்ளார்.

இவ்வாறு சினிமா மேல் தீராத மோகம் கொண்ட ஜெயம் ரவி தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு கமல்ஹாசனுடன் ஒரு திரைப்படத்தில் பணியாற்றியிருக்கிறார். ஆம்!

கமல்ஹாசன் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “ஆளவந்தான்”. இத்திரைப்படத்தில் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக ஜெயம் ரவி பணியாற்றி இருக்கிறார். இது முதலில் கமல்ஹாசனுக்கே தெரியாது.

சென்ற ஆண்டு “பூமி” திரைப்படத்தின் புரோமோஷனுக்காக “பிக் பாஸ்” நிகழ்ச்சிக்கு வந்த ஜெயம் ரவி, கமல்ஹாசனிடம் “உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா என எனக்கு தெரியாது. நீங்கள் நடித்த ஆளவந்தான் திரைப்படத்தில் நான் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறேன். அப்போது எனக்கு 21 வயது தான். உங்களை அருகில் பார்க்கவே பயமாக இருக்கும்” என கூறினார்.

மேலும் கூறிய அவர் “ஆளவந்தான் திரைப்படத்திற்காக நீங்கள் உங்கள் உடலை மெருகேற்றி வைத்திருந்தீர்கள். டெல்லியில் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது உதவி இயக்குனர்களெல்லாம் குளிர் தாங்கமுடியாமல் இருந்தோம். ஆனால் நீங்கள் வெறும் ஒரு டீ சர்ட் மட்டுமே அணிந்து ‘ஷாட் போலாமா?’ என கேட்டீர்கள்.

சில நேரங்களில் ஸ்டண்ட் காட்சிகளில் உங்களுக்கு அடிபட்டு ரத்தம் வரும். ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் நடிப்பீர்கள். உங்களுடைய அர்ப்பணிப்பை பார்த்து நான் வியந்துபோனேன்” என தனது அனுபவங்களை கமல்ஹாசனுடன் பகிர்ந்துகொண்டார்.

இவ்வாறு சினிமாவின் மீது தீரா காதல் கொண்ட ஜெயம் ரவி, தற்போது தமிழின் முன்னணி நடிகராக வளர்ந்திருப்பதற்கு அவரின் இடைவிடாத உழைப்பே காரணம்.

Next Story