Categories: Cinema News latest news

சேப்டர் க்ளோஸ்! மாமியார் பிடியில் சிக்கி சின்னா பின்னமாகும் ஜெயம் ரவி – எப்பா அருள்மொழிவர்மா உனக்கா இப்படி?

Jayam Ravi: தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி ஒரு தனிச் சிறப்பான இடத்தைப் பிடித்து அவர் வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அந்தகால ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்றவர்களின் இடத்தில்தான் இப்போது ஜெயம் ரவி இருந்துவருகிறார்.

பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மனாக நடித்த ஜெயம் ரவிக்கு அதன் பிறகு வெளிவந்த எந்தப் படங்களும் எதிர்பார்த்த அளவில் போகவில்லை. சமீபத்தில் வெளியான இறைவன் திரைப்படமும் இந்தளவுக்கு ப்ளாப் ஆகுமா? என்று கூட அவர் நினைக்கவில்லை.

இதையும் படிங்க: இடுப்பு மடிப்ப பாத்தே ஏங்கி போனோம்!.. கேப்பு உடாம போட்டு பொளக்கும் திவ்யா துரைசாமி!…

இறைவன் படத்திற்காக அவர் செய்த ப்ரோமோஷன் அதிகம். ஆனால் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. கோமாளி படத்திற்கு பிறகு அவர் சோலாவாக இதுவரை ஜொலிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அகிலன், பூமி போன்ற படங்கள் அனைத்தும் அட்டர் ப்ளாப் ஆனது. இந்த நிலையில் அடங்கமறு படத்தின் இயக்குனர் கார்த்திக் தங்கவேலு பெரிய அளவில் பட்ஜெட் உள்ள கதையை போய் சொல்லியிருக்கிறார். பெரும்பாலும் ஜெயம் ரவியின் படங்களை அவரின் மாமியாரான சுஜாதா விஜயகுமார் தான் தயாரித்து வருகிறார்.

இதையும் படிங்க: ஆறு மாசமாச்சி.. நாசமா போச்சி!.. விடாமுயற்சியால் விரக்தியான அஜித் ஃபேன்ஸ்!.. ஹேஷ்டேக்கை பாருங்க!..

அந்த வகையில் சுஜாதா விஜயகுமாரிடம் அடங்கமறு கார்த்திக் கதையை போய்ச் சொல்லியிருக்கிறார். ஆனால் சுஜாதா விஜயகுமார் இந்த பட்ஜெட்டில் எல்லாம் என்னால் படம் பண்ணமுடியாது. வேண்டுமென்றால் வேறு கதையை கொண்டு வாங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டாராம்.

அடங்கமறு படத்திற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் தங்கவேலுவும் எந்தவொரு படத்தையும் எடுத்ததாக தெரியவில்லை. ஏராளமான ஹீரோக்களிடமும் கதையை சொல்லி திரும்ப வந்ததுதான் மிச்சம். இப்போது ஜெயம் ரவி தரப்பில் இருந்தும் இந்த மாதிரி பதில் வந்திருக்கிறது.

இதையும் படிங்க: லியோ டிரெய்லருக்கு வந்த ஆப்பு!.. ஓவர் ஆட்டம் போட்டா இப்படித்தான்!. அப்செட்டில் விஜய் ரசிகர்கள்!.

இருந்தாலும் ஜெயம் ரவியை வைத்து பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க எத்தனையோ தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் ஜெயம் ரவியின் மாமியார் சிபாரிசு செய்யலாம். அதை விட்டு வருகிற இயக்குனர்களை எல்லாம் திருப்பி அனுப்பிக் கொண்டு வருகிறார். போகிற போக்கை பார்த்தால் ஜெயம் ரவியின் கெரியரையே க்ளோஸ் செய்து விடுவார் போல என்று கூறி வருகிறார்கள்.

Published by
Rohini