பொன்னியின் செல்வனால் எகிறிய ஜெயம் ரவி மார்க்கெட்... ஒரு விளம்பரத்துக்கு மட்டுமே இத்தனை கோடி சம்பளமாம்...

Jayam Ravi
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்திற்கு பின்னர் தனது மார்க்கெட் அதிகரித்து இருப்பதால் சம்பளத்தினை அதிகரித்து இருக்கிறார்.

Jayam Ravi
தமிழில் ஜெயம் படம் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் ரவி. இவர் தனது அண்ணன் ராஜாவின் இயக்கத்தில் தான் நடிக்க துவங்கினார். முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. தொடர்ச்சியாக பட வாய்ப்புகளும் குவிந்தது. எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் தான் ரவிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உண்டானது.
இதையும் படிங்க: பாலா படத்திலிருந்து விலகிய சூர்யா…உண்மையில் என்னதான் நடந்தது?….
தொடர்ச்சியாக லவ்வர் வேடத்திலேயே நடித்து வந்தவர். தனி ஒருவன் படத்தின் மூலம் ஆக்ஷன் அவதாரம் எடுத்தார். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஜெயம் ரவிக்கு அதை தொடர்ந்து பெரிய வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் நஷ்டப்படாமல் இருக்கலாம் என கோலிவுட் தயாரிப்பாளர்கள் எண்ணினர். சமீபத்தில் அவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார். கதையின் நாயகன் அருள்மொழி வர்மனாக அவர் நடித்ததால் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றார்.

Jayam Ravi
தொடர்ந்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த படமே ரவியின் மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்தி இருக்கிறதாம். அதனால் சம்பளத்தினை அதிகரித்து உள்ளாராம். அவர் நடித்து வெளியான பிரபல நிறுவனத்தின் விளம்பரத்துக்கு மட்டுமே ரூ.5 கோடி வாங்கியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.