“பொன்னியின் செல்வன் எனக்கு திருப்தியாக இல்லை”… மணி ரத்னத்திடமே தைரியமாக போட்டு உடைத்த ஜெயம் ரவி…
மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியான நிலையில், சுமார் ரூ.400 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து தமிழ் சினிமா வரலாற்றில் சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் இத்திரைப்படம் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றது.
இதில் வந்தியதேவன் கதாப்பாத்திரத்தில் கார்த்தி, சிறப்பாக பொருந்தியிருந்தார் என பலரும் பாராட்டி வந்தனர். அதே போல் அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும், குந்தவையாக த்ரிஷாவும் தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர்.
ஆதித்த கரிகாலனாக வந்த விக்ரம், தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதே போல் நந்தினியாக வந்த ஐஸ்வர்யா ராய் கண்களிலேயே வில்லத்தனத்தை காட்டியிருந்தார். மேலும் இதில் நடித்த பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா லட்சுமி, ரகுமான் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்திருந்தனர்.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவரும் என கூறப்படுகிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் சிறப்பாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: “உனக்கு நடிக்க வராதா!! யூ ஆர் செலக்டட்”… ஏ.வி.எம். செய்த துணிகர காரியம்… டாப் நடிகையின் சுவாரஸ்ய கதை…
இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி, சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தை குறித்து மிகவும் வெளிப்படையான ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார்.
“பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் என்னுடைய நடிப்பு எனக்கு திருப்தியாக இல்லை. அதில் நான் செய்த தவறுகள் மட்டும்தான் என் கண்களில் பட்டது. எனினும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததற்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்” என கூறியுள்ளார்.
அப்போது அந்த பேட்டியில் ஜெயம் ரவியுடன் கலந்துகொண்ட இயக்குனர் மணி ரத்னம், ஜெயம் ரவியிடம் “இதை சொன்னதற்கு மிகவும் நன்றி” என கூறியது குறிப்பிடத்தக்கது.