அந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டேனே! செய்தியாளர்களிடம் பழிப்பு காட்டி சென்ற நடிகர் ஜீவா... சின்ன புள்ளத்தனமா இல்ல!
நடிகர் ஜீவா செய்தியாளர்களை சந்தித்த போது கேட்கப்பட்ட கேள்விக்கு நான்லாம் பதில் சொல்ல மாட்டேன். நீங்க சொல்லுங்க என கலாய்த்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் ஐகானாக இருக்கும் அஜித் மற்றும் விஜய் தற்போதைய சினிமாவின் வைரல் டாப்பிக்காகி இருக்கிறார்கள். தை பொங்கல் தினத்தில் இரண்டு படமும் மோதிக்கொள்ள தயாராகி விட்டது. இறுதிக்கட்ட பணிகளில் இரண்டு படக்குழுவும் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
தளபதி விஜய் நடிப்பில் வாரிசு படத்தினை வம்சி இயக்கி இருக்கிறார். தமன் இசையில் விஜய் குரலில் ஏற்கனவே ரஞ்சிதமே பாடல் ரிலீஸாகி செம ஹிட் அடித்திருக்கிறது. இன்று (நவ.4) நடிகர் சிம்பு குரலில் இரண்டாவது சிங்கிள் வெளியாக இருக்கிறது.
இதையும் படிங்க: எந்த படமும் ஓடல!…தொழிலை மாற்றும் ஜீவா…இதாவது தேறுமா?
ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் படம். மூன்று படங்களிலுமே அஜித் தான் நாயகனாக நடித்திருக்கிறார். வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் செய்தியாளர்கள் பிரபலங்களை பார்க்கும் போது நீங்க யார் படத்துக்கு போவீங்க எனக் கேள்வி எழுப்புகின்றனர்.
இதே கேள்வியை நடிகர் ஜீவாவிடம் கேட்க நினைச்சேன் இந்த கேள்வி கேட்பீங்கனு. நான் பதில் சொல்ல மாட்டேன். சரி சொல்லுங்க நீங்க யார் படத்துக்கு போவீங்கனு கேள்வியை திருப்பி கேட்டார். உடனே உங்களுக்கே ஜெர்க் ஆகுதுல. அதுமாதிரி தான் எனக்கு யார் படத்துக்கு முதலில் டிக்கெட் கிடைக்குதோ அவங்க படத்துக்கு போவேன். என்னைப் போன்ற நடிகர்கள் அவர்களை பார்த்து தான் வளர்ந்தோம். இருவரும் முக்கியம் தான் என பதில் கூறி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.