யேசுதாஸை வென்று காட்டிய ஜெயச்சந்திரன்!.. பலருக்கும் தெரியாத பாடகரின் மறுபக்கம்!..

by Sankar |
vaiathaeki kaathirunthaal
X

vaiathaeki kaathirunthaal

தமிழ்நாடு பூர்வீகமாக அல்லாமல் பிற மொழிகளை தாய் மொழியாக கொண்டு சினிமாவில் வெற்றி பாடகர்களாக வலம் வந்தவர்களும் உண்டு. இதில் குறிப்பிட வேண்டியவர் கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்த பாடகர் ஜெயச்சந்திரன்.

எர்ணாகுளத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த அரச குடும்பத்தைச் சார்ந்தவர் ஜெயச்சந்திரன். இவருக்கு சிறுவயதிலிருந்தே இசைமேல் தனி ஒரு ஆர்வம் இருந்திருக்கிறது. 'வாய்ப்பாடல்' மட்டுமல்லாமல் 'மிருதங்கம்' இசைப்பதிலும் வல்லவராக திகழ்ந்தவர். இவர் தன்னுடைய எட்டு வயதிலேயே கோயில்களில் நடக்கும் பக்தி நிகழ்ச்சிகளிலும், பேராலயங்களின் ஆராதனை நேரங்களிலும் பாடல்கள் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

jeyachandran1

jeyachandran1

அதோடு மட்டுமல்லாமல் இவர் வசித்து வந்த பகுதி மக்களிடம் தனது பாடல்களை பாடி அவர்களிடமிருந்து பாராட்டுக்களை பெற்று வந்தவர். ஒருமுறை தன்னுடைய 14வது வயதில் தான் படித்து வந்த பள்ளியில் நடந்த ஒரு பாட்டு போட்டியில் இவர் பங்கேற்றிருக்கிறார்.

அதே போட்டியில் கே.ஜே.ஏசுதாஸ் பங்கேற்றார். வாய்ப்பாடு மற்றும் மிருதங்கம் இசைப்பதில் ஜெயச்சந்திரன் முதல் பரிசினை பெற்றிருக்கிறார். மலையாள படம் ஒன்றில் பாடும் வாய்ப்பினை பெற, பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இந்த பாடல் எம்.எஸ்.விஸ்வநாதனின் காதுகளை சென்றடைய தமிழ் மொழியில் இவரது அத்தியாயம் துவங்கியது. இவருக்கு தமிழ் பற்று மிகவும் அதிகம்.

இவரை அதிகம் பயன்படுத்தியது இசைஞானி இளையராஜான். அவரின் இசையில் பல பாடல்களையும் பாடி அசத்தி இருக்கிறார் ஜெயச்சந்திரன். இவர் பாடிய பல பாடல்களை கே.ஜே.யேசுதாஸ்தான் பாடினார் என பலரும் நினைத்தனர். இவர் பாடிய ராசாத்தி ‘உன்ன காணாத நெஞ்சு’ இப்போதும் 2கே கிட்ஸ்களின் ஃபேவரைட்டாக இருக்கிறது.

"அம்மன் கோவில் கிழக்காலே", "கடலோர கவிதைகள்", "வைதேகி காத்திருந்தாள்" என வரிசையாக சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தார். ஏ.ஆர்.ரகுமான் தந்தையின் முதல் பட இசையமைப்பில் பாடும் வாய்ப்பினையும் பெற்றார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளரான உடன் ஜெயசந்திரனுக்கு வாய்ப்பினை வழங்கியிருக்கிறார். "கிழக்கு சீமையிலே", "மே மாதம்", படங்களில் பாடியிருப்பார். ரஜினிகாந்தின் "பாபா" படத்திலும் ஒரு பாடலை ஜெயச்சந்திரன் பாடியிருப்பார்.

Next Story