“பொன்னியின் செல்வன்” திரைப்படம் முதல் பாகம் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து வருகிற 28 ஆம் தேதி இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது. முதல் பாகத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. அதே போல் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பையே பெற்றிருக்கிறது. இத்திரைப்படத்தின் பெரும்பான்மையான பாடல்களை எழுதியவர் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன்.
இளங்கோ கிருஷ்ணன் தொடக்கத்தில் சினிமாவில் எப்படியாவது பாடலாசிரியராக ஆகவேண்டும் என்ற முயற்சியில் இருந்தார். ஆனால் காலம் அவரை பத்திரிக்கையாளராக ஆக்கிவிட்டது. இளங்கோ கிருஷ்ணன் எழுத்தாளர் மற்றும் வசனக்கர்த்தா ஜெயமோகனின் தீவிர வாசகர். மேலும் ஜெயமோகனுடன் நெருங்கி பழகியும் வருபவர்.
ஜெயமோகன் மூலமாகத்தான் இளங்கோ கிருஷ்ணனுக்கு “பொன்னியின் செல்வன்” பாடல்களை எழுத வாய்ப்புக் கிடைத்தது. முதலில் ஒரு பாடலுக்குத்தான் வாய்ப்பு கொடுப்பார்கள் என நினைத்தாராம் இளங்கோ கிருஷ்ணன். ஆனால் கிட்டத்தட்ட 12 பாடல்கள் எழுதியிருக்கிறார்.
அவர் மூன்றாவது பாடலை எழுத அழைக்கப்பட்டபோது எழுத்தாளர் ஜெயமோகனுக்கு தொடர்புகொண்டாராம். “சார் இப்போ மூனாவது பாட்டு எழுதிட்டு இருக்கேன்’ என கூறினாராம். அதற்கு ஜெயமோகன், “முதல் பாட்டுலயே உன்னைய அடிச்சி விரட்டிடுவாங்கன்னு நினைச்சேன்” என கேலி செய்திருக்கிறார். எனினும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் பாடல் வரிகள் சோழர் கால தமிழை நம் கண்முன் கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெறும் லாரன்ஸ் ராகவா லாரன்ஸாக ஆனது எப்படி?… சிறு வயதில் ஒரு அபூர்வ சம்பவம்…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…