Connect with us
Raghava Lawrence

Cinema News

வெறும் லாரன்ஸ் ராகவா லாரன்ஸாக ஆனது எப்படி?… சிறு வயதில் ஒரு அபூர்வ சம்பவம்…

இந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான நடன அமைப்பாளராக திகழ்ந்து வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் நடன அமைப்பாளர் மட்டுமல்லாது பல திரைப்படங்களை இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார். ராகவா லாரன்ஸ் நடித்த முனி, காஞ்சனா போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவை.

ராகவா லாரன்ஸ் இளம் வயதில் ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனின் வீட்டில் எடுபிடியாக இருந்தார். அப்போதே ராகவா லாரன்ஸுக்கு நடனத்தின் மேல் ஆர்வம் உள்ளதை தெரிந்துகொண்டார் சூப்பர் சுப்பராயன். அந்த சமயத்தில் சூப்பர் சுப்பராயன் தான் பணியாற்றும் திரைப்படங்களின் படப்பிடிப்புகளுக்கு ராகவா லாரன்ஸையும் உதவியாளராக அழைத்துச் செல்வது வழக்கம். அப்போது ஒரு நாள் ரஜினிகாந்த் திரைப்படத்தில் சூப்பர் சுப்பராயன் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

அங்கே படப்பிடிப்பில் சூப்பர் சுப்பராயன் ராகவா லாரன்ஸை ரஜினியிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தார். “இந்த பையன் நல்லா டான்ஸ் ஆடுவான். இவனை யாராவது டான்ஸ் மாஸ்டர் கிட்ட சேர்த்துவிட முடியுமா?” என கேட்டிருக்கிறார். மேலும் ரஜினிகாந்தின் முன் ஆடிக்காண்பித்தார் லாரன்ஸ். அவரது நடனம் ரஜினிக்கு பிடித்துப்போனது. அவ்வாறுதான் பிரபுதேவாவின் குழுவில் சேர்ந்தார் ராகவா லாரன்ஸ்.

பின்னாளில் மிகப்பெரிய டான்ஸ் மாஸ்டராக வலம் வந்த ராகவா லாரன்ஸ், தனது சிறு வயதில் நடக்க கூட முடியாத நிலையில் இருந்தார் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?

ராகவா லாரன்ஸிற்கு மூன்று வயது இருக்கும்போதே அவருக்கு மூளையில் கட்டி இருந்தது. ஆதலால் அவரால் எழுந்து கூட நடக்க முடியாத சூழல் ஏற்பட்டது. பல ஆண்டுகள் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும் அவரது தாயார் ஸ்ரீராகவேந்திரரிடம் தனது மகனுக்கு பூரண குணமடையும்படி வேண்டிக்கொண்டதன் பயனாக ராகவா லாரன்ஸ் பூரண குணமடைந்தாராம். அதன் பிறகுதான் தனது பெயரை ராகவா லாரன்ஸ் என மாற்றிக்கொண்டாராம்.

இதையும் படிங்க: விஜயகாந்த் சினிமாவிற்குள் வந்ததற்கு காரணம் ரஜினியா?… இது புதுசா இருக்கே!

google news
Continue Reading

More in Cinema News

To Top