சூர்யாவுடன் நடிக்கும் வாரிசு நடிகை!. அட அவரே சொல்லிட்டாரு... இது செம காம்போ!...

by sankaran v |   ( Updated:2024-02-24 12:29:10  )
suriya
X

தமிழில் 80களில் முன்னணி நடிகையாகக் கலக்கியவர் ஸ்ரீதேவி. இங்கு மட்டுமல் இல்லாமல் பாலிவுட்டிலும் ஒரு ரவுண்டு வந்தார். தயாரிப்பாளர் போனிகபூரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது மூத்த மகள் ஜான்வி கபூர். மாடலிங்கில் இறங்கிய இவருக்கு அம்மாவைப் போல சினிமாவில் நடிக்கும் ஆசை வரவே பாலிவுட்டில் களம் இறங்கினார். தமிழில் அறிமுகமாவாரா என்ற ஏக்கத்தைத் தீர்த்து வைக்கும் வகையில் இப்போது அவரது தந்தை போனிகபூர் அதை உறுதி செய்துள்ளார்.

மாடலிங், வெப்சீரீஸ் என களம் கண்ட ஜான்வி 10க்கும் மேற்பட்ட இந்திப்படங்களில் நடித்தும் பெரிய அளவில் பாப்புலர் ஆகவில்லை. தெலுங்கில் ராம்சரணின் புதிய படத்தில் இவர் தான் ஜோடியாம். அவ்வப்போது ரசிகர்களைத் தன் கைக்குள் வைக்க வேண்டும் என்பதற்காக சமூக வலைதளங்களில் சூடேற்றும் போட்டோக்களைப் பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் கூட மணியைப் போட்டு மறைக்கும் விதத்தில் தூக்கலாக கிளாமர் போஸ் கொடுத்து தனது போட்டோக்களைப் பகிர்ந்து இருந்தார். இந்நிலையில் ராம்சரண், சூர்யாவுடன் ஜான்விகபூர் நடிப்பார் என போனிகபூர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Boni Kapoor

Boni Kapoor

ராம்சரணின் ஆர்சி16 என்ற தற்காலிகப் பெயருடன் கூடிய படத்தில் தனது மகள் ஜான்வி நடிப்பதாக போனிகபூர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை தேசிய விருது பெற்ற புச்சி பாபு சனா இயக்குகிறாராம். இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. படத்தின் இசை அமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கு பட உலகில் ராம்சரண் நடித்த படங்கள் பெரும்பாலும் மெகா ஹிட் அடிக்கும்.

அவருடன் ஜோடியாக நடிப்பதால் ஜான்விக்கும் நல்ல மவுசு இருக்கும். அதனால் அடுத்ததாக தமிழ்சினிமா உலகில் முன்னணி நடிகரான சூர்யாவுடன் இணைந்து நடித்து மாஸ் காட்டுவார் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். தெலுங்கு படம் நல்ல பிக் அப் தரும் என்பதனால் அதிகமான தெலங்கு படங்களைப் பார்த்துத் தன்னைத் தயார்படுத்தி வருகிறாராம் ஜான்வி.

janhvi

janhvi

கமலுடன் 80களில் அதிகப்படங்களில் ஜோடி சேர்ந்தவர் ஸ்ரீதேவி. அவரது மூத்த மகள் ஜான்வி இப்போது சூர்யாவுடன் தான் ஜோடி சேர்கிறார். அதே போல உலகநாயகன் கமலின் மூத்த மகள் சுருதிஹாசனும் முதன்முதலாக சூர்யாவுக்குத் தான் ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாடிக்கேத்த மூடி தான்.

Next Story