கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 10ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் முதல் நாளில் வெறும் 2 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்த நிலையில், படிப்படியாக அதன் வசூல் அதிகரித்து வருகிறது.
அதற்கு முக்கிய காரணமே கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம் படுதோல்வி அடைந்தது தான். நடிகர் ரஜினிகாந்த் முதல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வரை பல சினிமா பிரபலங்களும் தொடர்ந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு பெரியளவில் புரமோஷன் செய்து வரும் நிலையில், படத்தின் பட்ஜெட்டையாவது சம்பாதிக்க வேண்டும் என்கிற முயற்சியில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது என்கின்றனர்.
இதையும் படிங்க: விசித்ரா ஆடுறது சுயநல ஆட்டம்!.. அவங்க அர்ச்சனாவை பொத்தி வைக்கிறதே அதுக்குத்தான்.. வனிதா ஆவேசம்!..
வெள்ளிக்கிழமை வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் முதல் நாளில் 2 கோடி ரூபாயும், சனிக்கிழமை ஜப்பான் சரிவை சந்தித்த நிலையில், 5 கோடி ரூபாயும், தீபாவளி நாளான ஞாயிற்றுக்கிழமை 7 கோடி ரூபாயும், திங்கட்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், 6 கோடி ரூபாயும் வசூல் செய்த நிலையில், செவ்வாய்க்கிழமையான நேற்று 3 கோடி ரூபாயாக மீண்டும் வசூல் குறையத் தொடங்கி உள்ளது.
35 கோடிக்கும் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் இதுவரை 22 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸுக்கு பதில் முன்னணி ஹீரோக்கள் யாராவது நடித்திருந்தால் முதல் நாள் வசூலே பெரியளவில் இருக்கும் எனக் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: முன்ன பின்னன்னு சும்மா சுண்டி இழுக்குறாரே!.. மாளவிகான்னாலே தாராள மனசு தான் போல!..
இரண்டாவது வாரமும் ஜிகர்தண்டா வசூல் வேட்டை நடத்தினால் தான் பட்ஜெட்டை தாண்டி வசூல் செய்யும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன. கார்த்தி ஜப்பான், விக்ரம் பிரபு ரெய்டு, கிடா உள்ளிட்ட படங்கள் தியேட்டர்களில் சிறப்பாக ஓடியிருந்தால் ஜிகர்தண்டா வசூல் இதுவரை வெறும் 10 கோடி கூட வந்திருக்காது என்றும் திடுக்கிட வைக்கின்றனர்.
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…
தமிழ் சினிமாவில்…