விசித்ரா ஆடுறது சுயநல ஆட்டம்!.. அவங்க அர்ச்சனாவை பொத்தி வைக்கிறதே அதுக்குத்தான்.. வனிதா ஆவேசம்!..
பிக் பாஸ் வீட்டில் தனது மூத்த மகள் நாளுக்கு நாள் அசிங்கப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்து கடும் அப்செட்டில் இருந்தாலும், தொடர்ந்து பிக் பாஸ் விமர்சனங்களை கொடுத்து வருகிறார் வனிதா விஜயகுமார்.
முன்பு இருந்ததை போல திமிராகவும் கெத்தாகவும் எல்லாம் இப்போது அவரால் பேசவே முடியல. ஜோவிகா டாக்ஸிக்கான நபர்களுடன் பழகி வருகிறார் என விசித்ரா அர்ச்சனாவிடம் சொல்வதை வைத்து பேசிய வனிதா விஜயகுமார், விசித்ரா அர்ச்சனாவை புரொடெக்ட் பண்ணல என்றும் பொத்தி வைக்கிறார் என்றும் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: முன்ன பின்னன்னு சும்மா சுண்டி இழுக்குறாரே!.. மாளவிகான்னாலே தாராள மனசு தான் போல!..
பாதுகாப்பது வேறு, பொத்தி வைப்பது வேறு.. விசித்ரா தனது சுயநலத்துக்காக அர்ச்சனாவை பகடை காய் போல பயன்படுத்தி வருகிறார் என்றும் அவருடைய கேம் சீக்கிரமே கெட்டுப் போய் விடும் என கொந்தளித்துள்ளார்.
ஜோவிகாவுக்கு கடந்த வாரம் கமல் தொடர்ந்து டோஸ் விட்ட நிலையில், அப்செட்டான ஜோவிகா கண் கலங்கி அழுதே விட்டார். தனது மகள் பிக் பாஸ் வீட்டிற்குச் என்று அழுது கொண்டிருப்பதை பார்த்து வனிதா விஜயகுமாரால் தாங்கவே முடியவில்லை என்றும் அடுத்தவர்களை கத்தி பேசும் போதும், அதட்டிப் பேசும் போது மட்டும் சுகமா இருக்கோ என பிக் பாஸ் ரசிகர்கள் ஜோவிகாவையும் அவரது அம்மா வனிதாவையும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஒரு குறிஞ்சி மலர்!.. எஸ்.ஜே. சூர்யாவுக்கு புதிய பட்டம் கொடுத்த சூப்பர்ஸ்டார்!..
பிக் பாஸ் வீட்டுக்குள் வனிதா விஜயகுமார் எப்போடா ஃப்ரீஸ் டாஸ்க்குக்குள் செல்வோம் என காத்துக் கொண்டிருக்கிறார். அதுவரை தனது மகளை எவிக்ட் ஆகாமலும் அவர் வெளியே இருந்து பாதுகாத்து வருவார் என்றும் அவர் மீது விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
மாயா மற்றும் பூர்ணிமாவுடன் ஜோவிகா சேர்ந்து ரொம்பவே கெட்டுப் போய் வருகிறார் என்றும் அவரது பெயர் டேமேஜ் ஆக காரணமே சேர்க்கை சரியில்லை என்பது தான் எனக் கூறுகின்றனர்.
COPYRIGHT 2024
Powered By Blinkcms